May 29, 2024
By: mukesh Mதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எதை சாப்பிட்டாலும் அது குழந்தைக்கு போய் சேரும் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், பாலூட்டும் பெண்கள் ஆர்ஞ்சு பழம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்!
Image Source: pexels-com
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் இரும்பு சத்தத்தையும் தருகிறது. ஆனால் இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம்.
Image Source: istock
ஆரஞ்சு பழத்தில் மற்ற பழங்களை விட அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பை தடுக்க உதவுகிறது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வைட்டமின் சி நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளலாம்.
Image Source: istock
தாய்ப்பால் கொடுக்கும் போது ஆரஞ்சு பழத்தை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிறு, சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளின் சருமம் மிகவும் உணர்திறன் மிக்கது என்பதால் ஒவ்வாமை இருந்தால் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
Image Source: istock
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு மாற்றான வைட்டமின் சி நிறைந்த மற்ற பழங்களை உட்கொள்ளலாம். காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: istock
சில குழந்தைகளுக்கு வயிற்று வலி இருக்கலாம். அது ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் தான் என்பதை உறுதி செய்ய முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை துப்புவது போல உணர்ந்தால் குழந்தைக்கு ஆரஞ்சு பழத்தின் சுவை பிடிக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.
Image Source: istock
ஆரஞ்சு பழம் சிட்ரஸ் என்பதால் அதில் உள்ள அமிலத்தன்மை தாய்ப்பாலை பாதிக்குமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழலாம். ஆனால் எந்த ஒரு சிட்ரஸ் பழமும் தாய்ப்பாலை அமலமாக்கும் தன்மை கொண்டதல்ல. எனவே நீங்கள் தாராளமாக சிட்ரஸ் நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.
Image Source: istock
தாய்ப்பால் சுரப்பதற்கு என்று பிரத்தியேகமாக எந்த ஒரு பழமும் இல்லை. எந்த ஒரு உணவை உட்கொண்டாலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் தினசரி உணவில் காய்கறிகள், புரதச்சத்து - நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் துத்தநாகத்தை ஆரஞ்சு பழத்தில் இருந்து பெற முடியும்.
Image Source: istock
Thanks For Reading!