Jun 19, 2024
பாலூட்டும் பெண்களுக்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் டீ வகைகளில் ‘செர்ரி தண்டு டீ’ முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இதன் நன்மை - தீமைகள் பற்றி விரிவாக இங்கு காணலாம்!
Image Source: istock
செர்ரி தண்டின் டையூரிடிக் பண்புகள், உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை அகற்ற உதவுவதோடு, உடல் திரவங்களைச் சீராக்க உதவி - தாய்ப்பால் உற்பத்திக்கான உகந்த சூழலை உண்டாக்குகிறது.
Image Source: pexels-com
செர்ரி தண்டின் டையூரிடிக் பண்புகள், உடலில் உள்ள கூடுதல் நீரை வற்றச்செய்வதோடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளையும் சீராக்குகிறது. அந்த வகையில், பிரசவத்திற்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் கை - கால் வீக்க பிரச்சனைகளை தடுக்கிறது.
Image Source: istock
பாலூட்டும் பெண்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று மார்பக இருக்கம் - வீக்கம் போன்ற பிரச்சனைகள். செர்ரி தண்டின் அழற்சி எதிர்ப்பு பண்பு இந்த மார்பக அசௌகரிய நிலையை எதிர்த்து போராட உதவுகிறது.
Image Source: istock
பாலூட்டும் தாய்மார்களின் ஆற்றல் இழப்பு பிரச்சனையை தவிர்க்க ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த இந்த செர்ரி தண்டு உதவியாக இருக்கும். எனவே, இந்த செர்ரி தண்டினை தேநீர் வடிவில் பாலூட்டும் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்.
Image Source: istock
செர்ரி தண்டில் காணப்படும் வைட்டமின் ஏ, பி1, சி போன்ற ஊட்டங்கள் பாலூட்டும் தாயின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, தாய்ப்பால் வழியே குழந்தையின் வலிமைக்கும் உதவுகிறது.
Image Source: istock
பிரசவத்திற்கு பின் பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. இந்நிலையில் இந்த செர்ரி தண்டின் நுகர்வு ஆனது உடலில் தேங்கும் கூடுதல் கலோரிகளை எரித்து, ஆரோக்கிய உடல் எடை பராமரிப்புக்கு உதவுகிறது.
Image Source: istock
பாலூட்டும் பெண்களுக்கு இந்த செர்ரி தண்டு பல்வேறு நன்மைகளை அளிக்கும் அதே நேரம் நீரிழப்பு, தாய்ப்பால் சுரப்பு தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்க கூடும். எனவே, இதனை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
பாலூட்டும் பெண்கள் ஒரு சிலருக்கு இந்த செர்ரி தண்டு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நிலையில், பெண்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின் இந்த செர்ரி தண்டினை எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!