Jun 7, 2024
கால்சியம் நிறைந்த பாலின் நுகர்வு நம் உடல் ஆரோக்கியம் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் இந்த பாலை காய்ச்சால் பச்சையாக பருகுவது நல்லது அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: pexels-com
அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் பாலை காய்ச்சாமல் பருகுவது கிருமி தொற்றுகள் மற்றும் கிருமி தொற்றுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கண்டறிந்துள்ளனர்.
Image Source: istock
குறித்த இந்த ஆய்வின் முடிவு, பச்சை பாலில் Salmonella, E. coli, Campylobacter, Staphylococcus aureus, Yersinia, Brucella, Coxiella மற்றும் Listeria போன்ற பாக்டீரியாக்களும்; H5N1 avian influenza (பறவை காய்ச்சல்) வைரஸ் மற்றும் பல கிருமிகள் இருக்கலாம் என கூறுகிறது.
Image Source: istock
கிருமி நிறைந்து காணப்படும் இந்த பாலை பருகும் நபர்களுக்கு ஒவ்வாமை பிரச்சனையில் துவங்கி காலரா, பறவை காய்ச்சல் போன்ற உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் கொடிய நோய்கள் வரை உண்டாகலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த பச்சை பாலின் தாக்கம் ஆனது கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய் கொண்டிருக்கும் நபர்கள், முதியவர்களை அதிகம் தாக்கும் என கூறப்படுகிறது.
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து குறைபாடு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து இந்த கிருமி தொற்றினை உண்டாக்குகிறது.
Image Source: istock
பச்சை பாலால் உண்டாகும் நோய்களை நாம் ஒரு சில அறிகுறிகள் வைத்து அறிந்துக்கொள்ளலாம். இந்த வகையில் இந்த பிரச்சனை கொண்ட நபர்கள் வயிற்று போக்கும், வாந்தி - குமட்டல், அடிவயிற்று வலி, உடல் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை நோயின் ஆரம்ப நிலையில் சந்திக்கின்றனர்.
Image Source: istock
குறித்த இந்த கிருமி தொற்றுக்கள் காய்ச்சாத பாலில் இருந்து மட்டும் பரவுவது இல்லை. காய்ச்சால பால் பயன்படுத்தி தயார் செய்யப்படும் சீஸ், வெண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் மூலமும் பரவலாம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்!
Image Source: istock
காய்ச்சாத பச்சை பாலின் நுகர்வால் உண்டாகும் இந்த கிருமி தொற்றுக்களை தவிர்க்க பாலை முறையாக காய்ச்சி பருகுவது நல்லது. அதேநேரம், பால் மூலம் பரவும் தொற்றுக்களை சமாளிக்க, மருத்துவ உதவி நாடுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!