[ad_1] ‘பிரட் - ஆப்பிள் கட்லெட்’ : எப்படி செய்வது தெரியுமா?

Jul 17, 2024

‘பிரட் - ஆப்பிள் கட்லெட்’ : எப்படி செய்வது தெரியுமா?

mukesh M

பிரட் - ஆப்பிள் கட்லெட்!

ஊட்டச்சத்து மிக்க ஆப்பிள் பழத்துடன் பிரட் துண்டு பயன்படுத்தி வித்தியாசமான கட்லெட் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

ஆப்பிள் - 2 | பிரட் துண்டு - 6 | நெய் - 1 ஸ்பூன் | சர்க்கரை - 2 ஸ்பூன் | இலவங்கப் பொடி - 1 ஸ்பூன் | உப்பு - 1 ஸ்பூன் | முட்டை - 1 | எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட ஆப்பிள் பழத்தின் தோல் நீக்கி சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தொடர்ந்து கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய்யுடன் இந்த ஆப்பிள் துண்டு, சர்க்கரை, உப்பு, இலங்கப்பொடி சேர்த்து 3- 4 நிமிடங்களுக்கு வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இதனுனடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி - பாத்திரத்தை மூடி தண்ணீர் சுண்டும் வரை மிதமான சூட்டில் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

இதனிடையே எடுத்துக்கொண்ட பிரட் துண்டுகளின் ஓரத்தை நீங்கி தனியே எடுத்து வைக்கவும். அதேநேரம் வெட்டி எடுத்த ஓரங்களை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது கட்லெட் பொரித்து எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதேநேரம், முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 6

தற்போது தயாராக வெட்டி எடுத்த பிரட் துண்டில், வேக வைத்த ஆப்பிள் சேர்மத்தை சேர்த்து, நன்கு உருட்டி தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Image Source: istock

பிரட் - ஆப்பிள் கட்லெட் ரெடி!

எண்ணெய் கொதிக்கும் நிலையில், தயாராக உருட்டி வைத்த இந்த துண்டுகளை முட்டை சேர்மத்தில் முக்கி எடுத்து, பின் பிரட் பொடியில் பிரட்டி - எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க கட்லெட் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: கேரளா ஸ்பெஷல் ‘கப்ப - தேங்காய் புட்டு’ செய்முறை!

[ad_2]