[ad_1] பிரபலமான டயட் முறைகளும் அதன் பக்கவிளைவுகளும்!

Aug 16, 2024

பிரபலமான டயட் முறைகளும் அதன் பக்கவிளைவுகளும்!

Suganthi

டயட் முறைகளின் பக்கவிளைவுகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் டயட் முறைகளைத் தான் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கண்மூடித்தனமாக பின்பற்றும் இந்த டயட் முறைகளுக்கு பின்னால் சில பக்க விளைவுகளும் உள்ளது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: istock

கீட்டோ டயட் முறை

இது குறைந்த கார்ப் மற்றும் அதிக கொழுப்புகள் கொண்ட டயட் முறையாகும். இதில் கார்போஹைட்ரேட்டுகளை குறைத்து கொழுப்பை எரிபொருளாக மாற்றி எடையை குறைக்கின்றனர். ஆனால் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இந்த டயட்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

Image Source: istock

பேலியோ டயட் முறை

பேலியோ டயட் முறையில் இறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து புரத உட்கொள்வதை எடுத்துக் கொள்கின்றனர். புரதங்கள் மிகுந்த உணவு, சிறுநீரகங்களில் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Image Source: istock

சைவ டயட் முறை

இந்த டயட் முறையில் இறைச்சி, பால், முட்டை போன்ற விலங்குப் பொருட்களை ஒதுக்குகின்றன. இதனா‌ல் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இரத்த சோகை, பலவீனமான எலும்புகள் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பை ஏற்படுத்தும்.

Image Source: pexels-com

இடைப்பட்ட டயட் முறை

இதில் உண்ணாவிரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இடைப்பட்ட நாளில் எதுவும் உண்ணாமல் டயட் இருக்கிறார்கள். இந்த டயட் முறையால் தீவிர பசி, எரிச்சல் மற்றும் ஆற்றலை பராமரிப்பதில் சிக்கல்கள் உண்டாகலாம்.

Image Source: istock

மத்திய தரைக்கடல் டயட் உணவுமுறை

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள்,, ஆலிவ் எண்ணெய்கள், மீன், மற்றும் கோழிகளின் அதிகமான நுகர்வு உங்களுக்கு எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Image Source: istock

அட்கின்ஸ் டயட் முறை

இது குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையாகும். இது படிப்படியாக கார்ப் உட்கொள்ளுதலை அதிகரிக்கிறது. கொழுப்புகள், புரதங்களை அதிகளவில் எடுப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய்களை உண்டாக்கும்.

Image Source: istock

சமைக்காத உணவு டயட் முறை

இதில் சமைக்கப்படாத அல்லது பதப்படுத்தப்படாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு நேர வாய்ப்புள்ளது. இதனால் புரதம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் குறைபாடுகள் ஏற்படலாம்.

Image Source: istock

ஜூஸ் டயட் முறை

இந்த டயட் முறையில் பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ் கொண்டு டயட்டை பின்பற்றுகின்றனர். இந்த டயட் முறையால் எடை இழப்பு ஏற்பட்டாலும் புரதம், தசை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவு ஏற்படுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா ?

[ad_2]