[ad_1] பிரிந்து வாழும் பெற்றோர்களும், குழந்தை பராமரிப்பு சட்டங்களும்!

பிரிந்து வாழும் பெற்றோர்களும், குழந்தை பராமரிப்பு சட்டங்களும்!

Aug 5, 2024

By: Pavithra

குழந்தை பராமரிப்பு!

பிரிந்து வாழும் பெற்றோர்களின் குழந்தையின் வயது, தேவைகள் மற்றும் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குழந்தை யாருடன் வாழ வேண்டும் மற்றும் யார் பராமரிப்பு தொகையைத் தர வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

Image Source: unsplash-com

பெற்றோருடனான நெருக்கம்!

நீதிமன்றம் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையேயான உறவின் நெருக்கம், நிலைத்தன்மை மற்றும் குழந்தையின் விருப்பம் ஆகியவற்றைப் பரிசீலித்து குழந்தை யாருடன் வாழ வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

Image Source: unsplash-com

பெற்றோரின் உடல் மற்றும் மனநலம்!

குழந்தையின் பாதுகாப்பிற்குப் பெற்றோரின் உடல் மற்றும் மனநலம் மிக முக்கியமானது என்பதால் பெற்றோர் குழந்தைக்கான ஆரோக்கியமான சூழலை வழங்கும் திறன் உள்ளதா என்று நீதிமன்றத்தால் ஆராயப்படும்.

Image Source: unsplash-com

பெற்றோரின் நிதி நிலை!

குழந்தையின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் மற்றும் அதற்கேற்ற நிதி வசதி இருக்கிறதா என்பதைப் பரிசீலித்துப் பெற்றோரின் வருமானத்தைப் பொருத்து பராமரிப்பு தொகை நிர்ணயிக்கப்படும்.

Image Source: unsplash-com

சிறப்புத் தேவைகள் மற்றும் கல்வி!

சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் தனிப்பட்ட பராமரிப்பு, மருத்துவ தேவை, கல்வி போன்றவைக்கு கூடுதல் தொகையைப் பராமரிப்பு தொகையை வழங்கும் தாய் அல்லது தந்தை தர வேண்டி இருக்கும்.

Image Source: unsplash-com

பெற்றோரின் பணி!

பெற்றோர் செய்யும் வேலை மற்றும் ஒழுக்க முறைகள் குழந்தைகளின் நல்வாழ்விற்கு இன்றியமையாதது, எனவே நீதிமன்றம் இதைத் தெளிவாக ஆய்வு செய்து அதற்கேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளும்.

Image Source: unsplash-com

சகோதர உறவு!

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு இடையேயான உறவு மற்றும் நெருக்கம் பெற்றோரின் பிரிவினால் பாதிக்கப்படாத வகையில் சகோதர உறவையும் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்.

Image Source: unsplash-com

கலாச்சார முக்கியத்துவம்!

குழந்தை மற்றும் பெற்றோரின் கலாச்சாரம் மற்றும் இன பின்னணிகளை மதிப்பீடு செய்து, அவர்களது பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நீதிமன்ற முடிவில் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Image Source: unsplash-com

சந்திக்கும் உரிமை!

பெற்றோர்களின் பிரிவினால் குழந்தை தாய் அல்லது தந்தை என யார் ஒருவரின் பாசத்தையும் இழந்துவிடாத வகையில், தனது குழந்தையைச் சந்திக்கும் உரிமை நீதிமன்ற நெறிமுறைகளின் கீழ் வழங்கப்படும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: உலகின் விலை உயர்ந்த நாய் இனங்கள் பற்றி தெரியுமா?

[ad_2]