Aug 6, 2024
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாகும் என்று சொல்வார்கள். அது அமிர்தத்தில் மட்டுமல்ல அது நம் உணவிலும் கூட. அந்த வரிசையில் பீட்ரூட்டை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் வரும் பாதிப்புகள் என்ன? பக்க விளைவுகளை என்ன? என்று இங்கு காணலாம்.
Image Source: pexels-com
பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் என்ற பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இதை நீங்கள் அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரகக் கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
Image Source: istock
அதே அதிகப்படியான அளவு பீட்ரூட்டை சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, வயிற்று போக்கு மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் உண்டாகலாம்.
Image Source: istock
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது ஹைபோ டென்ஷனுக்கு வழி வகுக்கும்.
Image Source: istock
பீட்ரூட்டை அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அரிப்பு, படை நோய், வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
Image Source: istock
பீட்ரூட்டை அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுவது தடைபடுகிறது. இதனால் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது.
Image Source: istock
பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும், மீடியம் கிளைசெமிக் குறியீடுகளும் பெற்று இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
பீட்ரூட்டை அதிகமாக எடுத்துக் கொள்வது அதன் சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக கல்லீரலை பாதிக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
பீட்ரூட்டில் கோய்ட்ரோஜன்கள் உள்ளன. இவை தைராய்டு செயல்பாடுகள் மற்றும் அயோடின் உறிஞ்சுதலில் தலையிட வாய்ப்பு உள்ளது. இதனால் ஹைப்போ தைராய்டிசம் மோசமாக வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
Thanks For Reading!