[ad_1] புது மாப்பிள்ளை 'பிரேம்ஜி' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

புது மாப்பிள்ளை 'பிரேம்ஜி' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Anoj

Jun 10, 2024

பிரேம்ஜி அமரன்

முரட்டு சிங்கிளாக வலம்வந்த பிரேம்ஜி அமரன் தனது 45ம் வயதில் திருமண வாழ்க்கைக்குள் அடியேடுத்து வைத்துள்ளார். அவர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்

Image Source: instagram-com/premgi

இசை குடும்பத்தில் பிறந்தவர்

இசை குடும்பத்தில் பிறந்தவர்

பிரேம்ஜி 1979 பிப்ரவரி 26ம் தேதி பிறந்தார். கங்கை அமரன், இளைய ராஜா போன்ற இசை ஞானிகள் இருக்கும் குடும்பத்தில் பிறந்ததால், பிரேம்ஜிக்கு சிறு வயதில் இருந்தே மியூசிக் ஆர்வம் இருந்துள்ளது

Image Source: instagram-com/premgi

இயக்குனர் அண்ணன்

பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு, கோலிவுட்டில் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அவரது அண்ணன் இயக்கும் படங்களில் பிரேம்ஜியின் கைவண்ணம் தவறாமல் இடம்பெறக்கூடும்

Image Source: instagram-com/premgi

இயக்குனர் ஆசை

1997ம் ஆண்டு பிரேம்ஜி தனது மூத்த சகோதரரும், எஸ்.பி.பி. சரணும் நடிக்கவிருந்த Wanted என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக திட்டமிட்டார். ஆனால், அப்படத்தின் ஷூட்டிங் கைவிடப்பட்டது

Image Source: instagram-com/premgi

யுவன் உதவியாளர்

மியூசிக் மீதான ஆர்வத்தால் அவரது உறவினரும், திரைப்பட இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். பெரும்பாலும் யுவன் இசையமைப்பில் Rap வரிகளை பிரேம்ஜி பாடியிருப்பார்

Image Source: instagram-com/premgi

நடிப்பு பயணம்

2006ல் சிம்புவின் வல்லவன் திரைப்படம் மூலம் பிரேம்ஜி நடிகராக அறிமுகமானார். பிறகு, சகோதரர் இயக்கிய சென்னை 600028 படத்தில் முக்கியமான ரோலில் நடித்தார். பிரேம்ஜி காமெடி சீனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திட, வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் இடம்பெற தொடங்கினார்

Image Source: instagram-com/premgi

இசையமைப்பாளர் அவதாரம்

2005ல் வெங்கட் பிரபு நடித்த Gnabagam Varuthe படம் மூலம் இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் அறிமுகமானார். பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பிரேம்ஜி, மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'The One Anthem' எனும் பாடலை இசையமைத்தார்

Image Source: instagram-com/premgi

பேச்சுலர் லைப் ஓவர்

45 வயதில் பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லிவிட்டு, இந்து எனும் பெண்ணை பிரேம்ஜி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் எளிமையாக நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது

Image Source: twitter-com

ரசிகர்கள் பட்டாளம்

பிரேம்ஜியின் டைமிங் காமெடி மற்றும் பேஸ் எக்ஸ்பிரஷனை ரசித்திட தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரது இன்ஸ்டா பக்கத்தை லட்சக்கணக்கானோர் பின்தொடர செய்கின்றனர். காதலியை கரம்பிடித்த பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Image Source: instagram-com/premgi

Thanks For Reading!

Next: இந்திய சினிமாவின் சிறந்த 8 டைம் டிராவல் திரைப்படங்கள்!

[ad_2]