Anoj, Samayam Tamil
Aug 7, 2024
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஷாரிக் ஹாசன், தனது காதலி மரியா ஜெனிபரை திருமணம் செய்துகொள்ள போகிறார். ஷாரிக் ஹாசன் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்களை இங்கு காணலாம்
Image Source: instagram-com/shariqqqq777
பிரபல நட்சத்திரங்களான உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கானுக்கு மூத்த மகனாக பிறந்தவர் ஷாரிக் ஹாசன். இதன் காரணமாக, சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் அதிகரித்துள்ளது
Image Source: instagram-com/shariqqqq777
ஸ்டார் குடும்பத்தில் பிறந்த ஷாரிக்கிற்கு, கோலிவுட்டில் நேரடியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2016ல் ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்
Image Source: instagram-com/shariqqqq777
பிறகு, தொலைக்காட்சி ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் 2வது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 49வது நாளில் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார்
Image Source: instagram-com/shariqqqq777
பிக்பாஸ் புகழை தொடர்ந்து ஷாரிக் ஹாசனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் ஷாரிக் ஹாசன் நடித்துள்ளார். இதுதவிர, வெப் சீரிஸ் மற்றும் மியூசிக் ஆல்பங்களிலும் பணியாற்றியுள்ளார்
Image Source: instagram-com/shariqqqq777
தந்தை ரியாஸ் கான் போலவே பாடி பில்டிங்கில் ஷாரிக் அதீத ஆர்வமிக்கவர். தீவிர பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷாரிக், அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர செய்வார்
Image Source: instagram-com/shariqqqq777
ஷாரிக் ஹாசன் மார்ஷியல் ஆர்ட்ஸில் திறமைமிக்கவாராம். இதுதவிர, பாக்ஸிங் பயிற்சியும் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது
Image Source: instagram-com/shariqqqq777
ஷாரிக் ஹாசன், 3வது படிக்கும் போதே கால்பந்து விளையாட தொடங்கியுள்ளார். கால்பந்து தன்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பதாக கூறுகிறார். இதுதவிர, ஷாரிக் தேசிய அளவிலான தடகள வீரர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Image Source: instagram-com/shariqqqq777
ஷாரிக், மரியா ஜெனிபர் என்னும் பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை அடிக்கடி சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்த நிலையில், தற்போது பெற்றோர் சம்மத்ததுடன் திருமணம் செய்துகொள்கின்றனர்
Image Source: instagram-com/umariyazkhan
Thanks For Reading!