Jul 19, 2024
BY: mukesh M, Samayam Tamilபுரதச்சத்து நிறைந்த சோயா பின்ஸ் பயன்படுத்தி சுவையான கேக் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
சோயா பீன்ஸ் - 2 கப் | பேக்கிங் சோடா - 1 ஸ்பூன் | சர்க்கரை - 1 கப் | முட்டை - 2 | எண்ணெய் - போதுமான அளவு | எள்ளு - 3 ஸ்பூன் | நட்ஸ் வகைகள் - ஒரு கைப்பிடி
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட சோயா பீன்ஸை ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 3 மணி நேரங்கள் வரை ஊற வைத்து எடுத்து, பின் நன்கு காற்றாட உலர விடவும்.
Image Source: istock
சோயா பீன்ஸ் நன்கு உலர்ந்த பின் மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து - திப்பை நீக்கி சுத்தம் செய்து அகன்ற பாத்திரம் ஒன்றுக்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் பேக்கிங் சோடா, சர்க்கரை, எள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துவிடவும்.
Image Source: istock
பின் இதனுடன் முட்டை உடைத்து சேர்த்து நன்கு கட்டிகள் இல்லா வகையில் கரைத்துக்கொள்ள கேக் சேர்மம் ரெடி!
Image Source: pexels-com
தற்போது கேக் தயார் செய்ய தேர்வு செய்த ஓவனை 180℃ வெப்பநிலையில் 10 - 15 நிமிடங்களுக்கு Preheat செய்து தயார்படுத்தவும்.
Image Source: istock
இதனிடையே பேக்கிங் ட்ரே ஒன்றினை எடுத்து, எண்ணெய் தடவி தயார் செய்து பின் இதில் தயாராக உள்ள கேக் சேர்மத்தை சேர்க்கவும். பின் இதன் மீது நட்ஸ்களை பரவலாக தூவி விடவும்!
Image Source: istock
பின் தயாராக உள்ள ஓவனில் இந்த பேக்கிங் ட்ரேவினை வைத்து 180℃ வெப்பநிலையில் 30 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்க சுவையான சோயா பீன்ஸ் கேக் ரெடி!
Image Source: istock
Thanks For Reading!