Aug 17, 2024
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த புலாவ் ஒன்றினை பருப்பு மற்றும் காய்கறிகளின் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
அரிசி - ½ கப் | பச்சை பயறு - ½ கப் | மசூர் பருப்பு - ½ கப் | கடலை பருப்பு - ½ கப் | பாசி பருப்பு - ½ கப் | சீரகம் - ½ ஸ்பூன் | பச்சை மிளகாய் - 2 | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
Image Source: istock
வெங்காயம் - 1 | உருளைக்கிழங்கு - 1 | கேரட் - 1 | மஞ்சள் - ½ ஸ்பூன் | மிளகாய் பொடி - ½ ஸ்பூன் | மல்லி பொடி - ½ ஸ்பூன் | தக்காளி - 1 | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட அரிசி, பச்சை பயறு, மசூர் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து பின் போதுமான அளவு தண்ணீருடன் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
Image Source: pexels-com
இதனிடையே எடுத்துக்கொண்ட தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை சுத்தம் செய்து நன்கு பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது புலாவ் தயார் செய்ய குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் கேரட், உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 4 - 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின் இதனுடன் தக்காளி, மஞ்சள், மல்லி பொடி, மிளகாய் பொடி, பெருங்காயம் சேர்துத தக்காளி நன்கு மசிய வதக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் ஊற வைத்த அரிசி, பருப்பு கலவை சேர்த்து கிளறவும்!
Image Source: istock
பின் இதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் வர வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான வெஜ் புலாவ் ரெடி.
Image Source: istock
Thanks For Reading!