[ad_1] புரோட்டீன் நிறைந்த 'வாழைப்பழ ஐஸ்கிரீம்' எளிய செய்முறை​

May 31, 2024

BY: Anoj

புரோட்டீன் நிறைந்த 'வாழைப்பழ ஐஸ்கிரீம்' எளிய செய்முறை​

வாழைப்பழம் ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், சர்க்கரை மற்றும் கலோரி உள்ளடக்கத்தால் பலரும் பயப்படுவது உண்டு. ஆனால், வாழைப்பழத்தை கொண்டு ரெடி செய்தால் மிகவும் ஹெல்தியான ஐஸ்கிரீமாக மாறக்கூடும். அதன் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 3; வேர்க்கடலை - அரை கப்; பீனட் பட்டர் - 2 டீஸ்பூன்; புரோட்டீன் பவுடர் - 2 டீஸ்பூன்; வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்; சோயா பால் - 1 லிட்டர்; தேன் - சுவைக்கேற்ப

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக கட் செய்ய வேண்டும். அவை கிரீமி மேற்பரப்பை பெற, ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைக்க செய்யலாம்

Image Source: pexels-com

செய்முறை படி- 2

ஃப்ரீஸ் செய்யப்பட்ட வாழைப்பழ துண்டுகளை மிக்ஸி ஜாருக்கு மாற்ற வேண்டும். அத்துடன் புரோட்டீன் பவுடரை சேர்த்து பேஸ்டாக அரைத்து தனியாக வைத்துவிடவும்

Image Source: istock

செய்முறை படி - 3

இதற்கிடையில் ஒரு கடாயில், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின் அவற்றை பவலுக்கு மாற்றி பொடித்து தனியாக வைத்துக்கொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 4

இப்போது மிக்ஸ் ஜாரில், வேர்க்கடலை வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ், தேன், பால் மற்றும் வாழைப்பழ பேஸ்டை சேர்க்க வேண்டும்.

Image Source: istock

செய்முறை படி - 5

கலவை கெட்டியாகவும், க்ரீம் பதத்திற்கும் வரும் வரை பிளெண்டரில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 6

இந்த கலவையை பவுலுக்கு மாற்றிவிட்டு பொடித்த வேர்க்கடலையை சேர்க்க வேண்டும். கலவையை நன்றாக மிக்ஸ் செய்து, ஃப்ரீசரில் சுமார் 4 மணி நேரம் வைக்க வேண்டும்

Image Source: istock

புரோட்டீன் ஐஸ்கிரீம் ரெடி

ஐஸ்கிரீம் கலவையை வெளியே எடுத்து, அதன் மீது பிடித்தமான பொருட்களை தூவி சாப்பிட செய்யலாம். இதில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்க செய்யலாம்

Image Source: istock

Thanks For Reading!

Next: ஊட்டச்சத்து மிக்க ‘சோள பணியாரம்’ - செய்முறை!

[ad_2]