[ad_1] புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின் மீண்டும் புற்றுநோய் வருமா?

May 21, 2024

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின் மீண்டும் புற்றுநோய் வருமா?

mukesh M

மீண்டும் மீண்டும் புற்றுநோய்?

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று தீர்வு கண்ட பின்னர் மீண்டும் ஒரு புற்றுநோய் வருமா? இவ்வாறு மீண்டும் - மீண்டும் புற்றுநோய் வருவதன் காரணம் என்ன? இதற்கான தீர்வு தான் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: pexels-com

மீண்டும் புற்றுநோய் வருமா?

நிபுணரகள் கூற்றப்படி, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று தீர்வு கண்ட பின்னரும் ஒருவருக்கும் மீண்டும் அதே வகை புற்றுநோய் அல்லது, குறிப்பிட்ட அந்த புற்றுநோயின் துணை வகை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

Image Source: istock

காரணம் என்ன?

புற்றுநோய் சிகிச்சையின் போது தப்பிக்கும் ஒரு சில செல்கள், உடலில் தங்கி மீண்டும் புற்றுநோய் வருவதன் வாய்ப்பை அதிகரிக்கிறது. பெரும்பாலும், இந்த இரண்டாம் முறை தாக்குதல் ஆனது 3 வருடத்திற்குள் நிகழலாம்!

Image Source: istock

புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு என்ன?

ஆஸ்திரேலியா நாட்டு மருத்துவர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், தனி ஒரு நபரை மீண்டும் மீண்டும் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு 6 - 36% என கண்டறியப்பட்டுள்ளது!

Image Source: istock

எந்தெந்த புற்றுநோய்?

அதேநேரம், புற்றுநோய் மீண்டும் மீண்டும் வருவது அதன் வகையை பொறுத்தது எனவும்; சரும புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களே சிகிச்சைக்கு பின்னரும் மீண்டு வருவதாக கூறப்படுகிறது.

Image Source: istock

மரபணு சார்ந்த புற்றுநோய்!

குறிப்பாக மரபணு சார்ந்த புற்றுநோய்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், ஆஸ்திரேலியா மருத்துவர்கள் நடத்திய இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Image Source: istock

இரண்டாம் முறை புற்றுநோயை தடுப்பது எப்படி?

மீண்டு வரும் இந்த புற்றுநோயை தடுக்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம். அதாவது, அவ்வப்போது உங்கள் ஆரோக்கிய நிலையை பரிசோதிப்பது அவசியம்!

Image Source: istock

ஆரோக்கிய வாழ்க்கை முறை!

புகையிலை பயன்பாடு, ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பு, மதுபானத்தை தவிர்ப்பது, ஆரோக்கிய உணவு வழக்கம் என ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது இந்த புற்றுநோய் மீண்டு வருவதன் வாய்ப்பை குறைக்கும்!

Image Source: istock

எச்சரிக்கை!

சிகிச்சைக்கு பின் மீண்டு வரும் இந்த புற்றுநோய், முதல் வரும் புற்றுநோய்க்கு நிகரானது என்பதால், அலட்சியம் காட்டாமல் - முறையான சிகிச்சை பெற்று நலம் பெறுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: ஒமேகா - 3 குறைபாடு உண்டாவது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

[ad_2]