Aug 10, 2024
வைட்டமின் டி நிறைந்த உணவுகளின் நுகர்வு பல வகை புற்றுநோய்களின் வாய்ப்பை குறைக்கலாம் என பலரும் நம்பும் நிலையில், இந்த நம்பிக்கைக்கு பின் உள்ள உண்மை நிலை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
ஆய்வாளர்கள் கூற்றுப்படி இந்த வைட்டமின் டி-யின் நுகர்வு ஆனது, குறிப்பிட்ட ஒரு சில புற்றுநோய் வகைகளின் தாக்கத்தை மட்டுமே குறைக்கிறது. அனைத்து விதமான புற்றுநோய்களிலும் இருந்து காப்பது இல்லை!
Image Source: istock
வைட்டமின் டி நுகர்வு ஆனது கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. கால்சியத்தின் இந்த போதுமான அளவு உறிஞ்சுதல் ஆனது, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பதோடு, எலும்பு புற்றநோய் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது!
Image Source: istock
இதேப்போன்று மார்பக புற்றுநோய்க்கு காரணமாக செல்களின் வளர்ச்சியை தடுப்பதிலும் வைட்டமின் டி குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக தெரிகிறது. இருப்பினும், இந்த புற்றுநோயை முழுமையாக தடுக்கும் என்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!
Image Source: pexels-com
சரும ஆரோக்கியம் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி ஆனது, சரும புற்றுநோய்க்கான வாய்ப்புகளையும் தடுக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது!
Image Source: istock
குறிப்பிட்ட ஒரு சில புற்றுநோய்களின் தாக்கத்தை குறைக்கும் இந்த வைட்டமின் டி ஆனது, வயிற்று புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் - வாய் மற்றும் வயிற்று புற்றுநோய்களில் தாக்கத்தை உண்டாக்குவது இல்லை என கூறப்படுகிறது!
Image Source: istock
புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளில் இந்த வைட்டமின் டி பெருமளவு தாக்கத்தை உண்டாக்குவது இல்லை. இருப்பினும், நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், வாத தடுப்பு முயற்சிகளில் இந்த வைட்டமின் டி குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்குகிறது!
Image Source: istock
காளான், பால், சாலமன் மீன், கானாங்கெளுத்தி, மத்தி மீன், முட்டையின் மஞ்சள் கரு என வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்து, போதுமான அளவு வைட்டமின் டி எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
வைட்டமின் டி நுகர்வு ஆனது பல்வேறு நன்மைகள் மற்றும் ஒரு சில பக்க விளைவுகளை அளிக்கும் தன்மை கொண்டது. எனவே, இந்த வைட்டமின் டி-யினை உங்கள் உடல் தேவைக்கு ஏற்ற வகையில் அளவாக உட்கொள்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!