May 29, 2024
புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு பிறகு பல பக்க விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும். புற்றுநோய் சிகிச்சைக்கு பின் நம் உடலில் உண்டாகும் இந்த மாற்றங்கள் குறித்து அறிந்து, முன்னெச்சரிக்கையாக நடந்துக்கொள்வது நல்லது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: pexels-com
புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு மறதி, ரத்த சோகை, மனசோர்வு, உடல் எடை அதிகரிப்பு, அதிக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை நோயாளிகள் எதிர்கொள்ள நேரிடும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
Image Source: istock
புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சுகளை பயன்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் இது பற்களில் சேதத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு பல் சிதைவு ஏற்பட்டு அது பல் இழப்புக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் அதிக சோர்வினை உணரலாம். புற்றுநோயாளிகள் பொதுவாகவே அதிகமான மருந்துகளை உட்கொள்ள நேரிடும். இதன் காரணமாக உடலானது ஆற்றலை இழந்து சோர்வடைகிறது.
Image Source: istock
வயிற்றுப் பகுதியில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையான ஹீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு காரணமாக கருவுறுவதில் சிரமம் ஏற்படலாம். இது ஆண் மற்றும் பெண்களில் மலட்டு தன்மையை ஏற்படுத்தி குழந்தை பிறப்பில் பாதிப்பை உண்டாக்குகிறது.
Image Source: istock
புற்றுநோய் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பாலியல் ஈடுபாடுகளில் நாட்டக் குறைவு ஏற்படலாம். ஆண்களில் விறைப்புத் தன்மையும், பெண்களில் யோனி வறட்சி போன்ற பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
சில வகையான புற்று நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் காரணமாக உடலில் உள்ள முக்கிய உறுப்புக்கள் சேதம் அடையலாம். புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.
Image Source: istock
புற்றுநோயின் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சைகளுக்குப் பிறகு புற்றுநோயாளிகள் மூச்சு திணறல், அதீத இதயத்துடிப்பு போன்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். நோயின் தீவிரத்திற்கு ஏற்ப மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: istock
சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் போன்ற பாதிப்புகளை புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் எதிர்கொள்ளலாம்.
Image Source: istock
Thanks For Reading!