Jun 13, 2024
இயற்கையின் கம்பீரமான விலங்குகள் புலிகள். அதன் வாழ்வியலும், தனித்தன்மைகளும் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
Image Source: pexels-com
உலகின் மிகப்பெரிய காட்டுப் பூனை இனத்தைச் சேர்ந்தது புலிகள். அமெரிக்கச் சிங்கத்தை விட ஒரு வங்காளப் புலி 20 சதவீதம் பெரியது ஆகும்.
Image Source: pexels-com
மனிதர்களை விட சுமார் 6 மடங்கு சிறந்த இரவு பார்வைத் திறன் புலிகளுக்கு உள்ளது. இது இரவில் வேட்டையாட அவற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
Image Source: pexels-com
புலிகள் சிறந்த நீச்சல் வீரர்கள், அவை ஆறுகளையும், ஏரிகளையும் கடந்து நீந்தி வேட்டையாடத் தயங்காது. வெப்பமான நாட்களில் கழுத்து வரை நீரில் மூழ்கிப் பல மணி நேரங்களை செலவடுகின்றன.
Image Source: pexels-com
புலிகள் பொதுவாகத் தனிமையை விரும்பக் கூடியவை. சிங்கங்கள் கூட்டமாக வேட்டையாடுவதைப் போல், புலிகள் தனித்து வேட்டையாடுவதையே விரும்புகின்றன.
Image Source: pexels-com
புலிகளின் கர்ஜனை சுமார் 3 கி.மீ தொலைவு வரை கேட்கக் கூடியவை. தனக்கான எல்லை இது என்பதை அடையாளப்படுத்தவும் கர்ஜனை செய்யும்.
Image Source: pexels-com
புலிகள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவை. ஆனால் ஒரே நேரத்தில் 18 முதல் 20 கிலோ வரை புலிகள் சாப்பிடும்.
Image Source: pexels-com
புலியின் எச்சிலுக்கு கிருமி நாசினி பண்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புலிகள் தனது காயங்களைச் சுத்தம் செய்யவும் அதற்கான மருந்தாகவும் நாவல் நக்கி எச்சில் படுத்துகின்றன.
Image Source: pexels-com
காடுகளில் 3,900 புலிகள் உள்ள நிலையில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் மட்டும் தலா 5,000 புலிகள் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன.
Image Source: pexels-com
Thanks For Reading!