Jun 14, 2024
பூசணிக்காயை நாம் சமையலில் மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் சரும பராமரிப்பிற்கு உதவும் பண்புகள் அதிகம்.
Image Source: pexels
பூசணிக்காயில் இயற்கையான என்சைம்கள், பீட்டா கரோட்டீன், அத்தியாவசிய வைட்டமின்கள் நிரம்பியுள்ளதால் இது தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
Image Source: pexels
பூசணிக்காயை பயன்படுத்தி இயற்கையான முறையில் ஃபேஸ் மாஸ்க் போடுவது சிறந்த பலன்களை அளிக்கும். முகத்தை பொலிவடைய செய்வதோடு, நிறத்தை புதுப்பிக்கவும் உதவுகிறது.
Image Source: pexels
இந்த இயற்கை முறையில் வீட்டிலேயே தயார் செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு சருமத்தினை வளப்படுத்தி ஒளிர செய்கிறது.
Image Source: pexels
தேனுக்கு இயற்கையாகவே சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் தன்மையுள்ள நிலையில் 2 தேக்கரண்டி பூசணிக்கூழ் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து முகத்தில் மாஸ்க்காக போடலாம்.
Image Source: pexels
2 தேக்கரண்டி பூசணி பியூரி, 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து முகத்தில் பூசவும். இது ஸ்க்ரப் போல் செயல்பட்டு பொலிவிழந்த சருமத்தினை மீட்டெடுக்க பயன்படுகிறது.
Image Source: pexels
2 தேக்கரண்டி பூசணி பியூரி, 1 தேக்கரண்டி தயிர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பிரகாசமாகும்
Image Source: pexels
பூசணிக்காய் போல் பரங்கிக்காய் பயன்படுத்தியும் மாஸ்க் போடலாம். 2 தேக்கரண்டி பரங்கிக்காய் பியூரியை 1 தேக்கரண்டி அரைத்த ஓட்ஸுடன் சேர்த்து முகத்தில் போட்டால் உணர்திறன் சருமத்திற்கு நிவாரணம் கிடைக்கும்
Image Source: pexels
தற்போதைய சூழலில் பெண்கள் பியூட்டி பார்லரில் அதிகளவு பணம் செலவிட்டு ஃபேஸ் மாஸ்க்குகள் போடுவதோடு பக்க விளைவுகள் இன்றி வீட்டிலேயே இயற்கையான முறையில் இதுபோன்ற மாஸ்குக்கள் பயன்படுத்துவது சிறந்தது
Image Source: Samayam Tamil
Thanks For Reading!