Aug 20, 2024
பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆனால், அதன் வலுவான வாசனை காரணமாக பலரும் சாப்பிடுவதற்கு மறுப்பது உண்டு. இந்தப் பதிவில், பூண்டின் நன்மைகள் மற்றும் பூண்டு வாசனை வராத வகையில் எப்படி சாப்பிடலாம் என்பதையும் விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
பூண்டை சமைப்பது மூலம் அதன் வலுவான வாசனை குறைத்திட முடிகிறது. அது துர்நாற்றத்திற்கு காரணமான சல்பர் கலவைகளை நடுநிலையாக்கிட பயன்படுகிறது. பூண்டை வதக்கி சாப்பிடலாம் அல்லது தினசரி உணவில் சேர்க்க செய்யலாம்
Image Source: istock
பூண்டு சாப்பிட்ட பிறகு, பிரஷ் புதினாவை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அதில் இயற்கையாகவே துர்நாற்றத்தை போக்கும் பண்புகள் இருப்பதால், பூண்டின் வாசனையை குறைக்க உதவுகிறது
Image Source: istock
பூண்டுடன் ஒப்பிடும்போது பூண்டு பவுடர் குறைவான வாசனையே கொண்டிருக்கும். பூண்டு வாசனை வராமல் அதன் நன்மைகளை அனுபவிக்க உணவில் பூண்டு பவுடர் சேர்க்க செய்யுங்கள்
Image Source: istock
எலுமிச்சை சாறு, வினிகர் போன்ற அசிடிக் உணவுகளுடன் பூண்டை சேர்த்து சாப்பிடுவது, அதன் வாசனையை நடுநிலையாக்க உதவுகிறது. அவற்றில் காணப்படும் அமிலத்தன்மை, பூண்டில் உள்ள சல்பர் கலவைகளை எதிர்த்து போராடி, வாசனையை போக்க செய்கிறது
Image Source: istock
பூண்டு சாப்பிட்ட பிறகு, வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பது மூலம் துர்நாற்றத்தை போக்கிவிட முடியும். பல் துலக்குவது, மவுத் வாஷ் பயன்படுத்துவது பற்களில் படிந்துள்ள துகள்கள் மற்றும் பாக்டீரியாவை போக்கி பூண்டு வாசனையை குறைக்க செய்கிறது
Image Source: pexels-com
பூண்டில் அல்லிசின் போன்ற கலவைகள் உள்ளன. அவை நோய்த்தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நுகர்வு, சளி மற்றும் காய்ச்சல் தீவிரத்தை குறைக்கக்கூடும்
Image Source: istock
பூண்டில் உள்ள சில சேர்மங்கள் ரத்த நாளங்களை தளர்த்துவது மட்டுமின்றி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இவை இதய அமைப்பை வலுப்படுத்துவதோடு உயர் ரத்த அழுத்தம் தொடர்பான நோய் அபாயங்களை போக்குகிறது
Image Source: istock
பூண்டு செரிமான என்சைம் தூண்டி குடலில் நல்ல பாக்டீரியாக்கள் எண்ணிக்கையை தூண்டுவது மூலம் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்க பயன்படுகிறது
Image Source: istock
Thanks For Reading!