Jul 17, 2024
BY: Anojபூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டைக் கொண்டு வித விதமான சட்னி வகைகளை நம்மால் செய்ய முடியும். அவை சுவையாக இருப்பதோடு நிறைய உணவுகளுக்கு சிறந்த சைட்டிஷ்ஷாக இருக்கக்கூடும். அத்தகைய பூண்டு சட்னி வகைகளை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பூண்டு மற்றும் புதினா இரண்டுமே உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது. புதினா இலைகள், பூண்டு, கிராம்பு, பச்சை மிளகாய், தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்குங்கள். கபாப் மற்றும் இறைச்சி இவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
Image Source: istock
துருவிய தேங்காய், பூண்டு, கொண்டைக்கடலை, பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து தோசை, இட்லி மற்றும் வடைக்கு சைடிஷ்ஷாக பயன்படுத்துங்கள்.
Image Source: istock
தக்காளி, பூண்டு மற்றும் வர மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். சாதம், பரோட்டாவுக்கு தொட்டு சாப்பிடலாம்.
Image Source: istock
கொத்தமல்லி இலைகள், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை ஸ்நாக்ஸ் மற்றும் சாண்ட்விட்ச்க்கு தொட்டுக் கொள்ளலாம்.
Image Source: istock
புளியை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பூண்டு, வெல்லம், மிளகாய் தூள், உப்பு இவற்றை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பேல் பூரி, சேவ் பூரி மற்றும் தாகி பூரிக்கு பயன்படுகிறது.
Image Source: istock
வறுத்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்பொழுது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். உப்பு மற்றும் வினிகர் சேருங்கள். சாண்ட்விட்ச், பாஸ்தாக்கு தொட்டுக் கொள்ளலாம்.
Image Source: pexels-com
பூண்டு ஒரு வலுவான சுவையை கொண்டுள்ளது. எனவே இதனுடன் எலுமிச்சை, புளி மற்றும் வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
பூண்டு சட்னி தயாரிக்க நல்ல ப்ரஷ்ஷான பூண்டை பயன்படுத்துங்கள். இந்த சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரையும் பயன்படுத்த செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!