[ad_1] பூமியில் வாழும் அரிய வகை உயிரினங்கள் - எங்கு சென்றால் காணலாம்?

May 16, 2024

பூமியில் வாழும் அரிய வகை உயிரினங்கள் - எங்கு சென்றால் காணலாம்?

mukesh M

அழிந்து வரும் உயிரினங்கள்!

பல கடல் வாழ் உயிரினங்களும் பூமியில் வாழும் விலங்குகளும் நாளடைவில் அழிந்து கொண்டு வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற அழிந்து வரும் உயிரினங்களை பார்ப்பது அரிது. அழிந்துவரும் இந்த அரிய உயிரினங்களில் எஞ்சியிருக்கும் ஒரு சில உயிரினங்களை எங்கு பார்க்கலாம் என இங்கு காணலாம்.

Image Source: pexels-com

ஜெல்லி மீன்

உலகெங்கிலும் உள்ள ஒரு சில கடல் பகுதிகளில் இந்த ஜெல்லி மீனை பார்க்க முடியும். ஆனால் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீப் கடற்கரை மற்றும் கலிபோனியாவில் உள்ள மாண்டேரி பே ஆகிய இடங்களில் அதிகமான ஜெல்லி மீன்கள் வாழ்ந்து வருகிறது.

Image Source: unsplash-com

ஸ்டர்ஜன்

வட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியாவின் ஆறுகள் ஏரிகள் மற்றும் கடலோர நீரில் வாழும் ஒரு அரிய வகை மீன் இது. ஐரோப்பாவில் உள்ள டான்யூப் நதி, காஸ்பியன் கடல் மற்றும் கனடாவில் உள்ள பிரேசர் நதி போன்ற நீர் நிலைகளில் இந்த மீன் வகையை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

லாம்ப்ரே

ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழும் ஒரு அறிய வகை கடல் வாழ் உயிரினம் இது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் இந்த லாம்பிரேவை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

ராட்சச ஆமை

அழிந்து வரும் உயிரினங்கள் மத்தியில் இந்த ராட்சச ஆமையும் ஒன்று. இந்த ராட்சச ஆமைகளை ஈக்குவட்டாரின் தீவுகளிலும் சீஷெல்ஸில் உள்ள அல்டாப் கடல் பகுதியிலும் பார்க்கலாம்.

Image Source: unsplash-com

டுவாட்டாரா

இது பார்ப்பதற்கு ஒரு பெரிய வகை பச்சோந்தி போல இருக்கும். இந்த டுவாட்டாராவை நியூசிலாந்து அமைந்துள்ள ஸ்டீபன்ஸ் தீவு மற்றும் பல்வேறு வனவிலங்கு காப்பகங்களில் நீங்கள் பார்க்கலாம்.

Image Source: unsplash-com

கோய்லாகாந்த்

இது ஒரு பழமையான ஆள் கடல் மீன் வகையாகும். இந்திய பெருங்கடலில் மற்றும் தென்னாபிரிக்கா இந்தோனேசியாவின் கடற்கரையில் இந்த அரிய வகை மீன் அதிகம் காணப்படுகிறது.

Image Source: unsplash-com

நாட்டிலஸ்

பசிபிக் கடல் பகுதியில் உள்ள ஆழமான கடல் நீரில் வாழும் ஒரு அரிய வகை கடல்வாழ் உயிரினம் இது. பிலிப்பைன்ஸ் மற்றும் நியூ கினியா போன்ற இடங்களில் இருக்கும் கடற்கரைகளில் இந்த நாட்டிலஸ் இன்றும் காணப்படுகிறது.

Image Source: unsplash-com

குதிரைவாலி நண்டு

அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்திய பெருங்கடல் மற்றும் வளைகுடா கடற்கரைகளில் காணப்படும் ஒரு அரிய வகை நண்டு. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள டெய்லாவேர் விரிகுடா மற்றும் தாய்லாந்தின் வளைகுடாவில் அதிக அளவு குதிரைவாலி நண்டு காணப்படுகிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: உலகிலேயே அதிகமான நபர்கள் ஏறிய மலை சிகரங்கள் எது தெரியுமா?

[ad_2]