Jun 17, 2024
By: Nivethaஉலகளவில் பெண்களின் ஆயுட்காலம் என்பது கணிசமாக குறைந்து வருகிறது. இவர்கள் ஆண்களை விட அதிகளவில் புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களால் அதிகளவில் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம்
Image Source: pexel
அமெரிக்காவில் சுமார் 25,000 பெண்களை வைத்து ஆய்வு செய்ததில் ஒரு குறிப்பிட்ட வகை உணவு முறையினை டயட்டாக எடுத்து கொண்டால் இவர்களுக்கு ஏற்படும் கோளாறுகளை தடுக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
Image Source: pexel
தாவர அடிப்படையிலான மத்திய தரைக்கடல் உணவுகளை எடுத்து கொள்ளும் பெண்களுக்கு அவர்களது ஆயுட்காலத்தில் 23% அதிகரிப்பதாக ஆய்வின் தகவல் கூறுகிறது.
Image Source: pexel
இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய், முழு தானிய வகைகள், நட்ஸ்கள், விதைகள் உள்ளிட்டவை ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆகாரமாக உண்பதற்கு வலியுறுத்தப்படுகிறது.
Image Source: pexel
மீன், முட்டை, கோழி மற்றும் பாலின் மிதமான நுகர்வும் இந்த டயட்டில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி ஆகியவற்றை குறைந்தளவில் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Image Source: pexel
இந்த டயட்டில் இருக்கும் உணவு வகைகளில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, ஆக்சிஜனேட்டர்கள், நார்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளதால் இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளிட்டவை குறையும்.
Image Source: istock
சுமார் 45 வயதுடைய பெண்களை ஆராச்சியாளர்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தியுள்ளனர். அப்பெண்களிடம் அவர்களது வாழ்க்கை முறை, மருத்துவம் சார்ந்த வரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் பெற பட்டதாக கூறப்படுகிறது.
Image Source: pexel
இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
Image Source: pexel
சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த டயட்டை பின்பற்றுவதன் மூலம் மன சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிரந்தரமான தீர்வினை பெறலாம்.
Image Source: Navbharat Times
Thanks For Reading!