Jun 8, 2024
மென்மையான பீச் கலர் மேக்கப் தற்போது பெண்களிடையே மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. நீங்க மேக்கப் போட்டதே தெரியாது ஆனால் எங்கு சென்றாலும் அழகாக தெரிவீர்கள். சரி இந்த மென்மையான பீச் கலர் மேக்கப்பை எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
Image Source: istock
மாய்ஸ்சரைசர், லைட் பவுண்டேஷன், ரோஸி பிங்க், பீச் கலர் ஐ ஷேடோ, மஸ்காரா, ஐ ப்ரோ பென்சில், க்ரீமி அல்லது லிக்யூட் ஹைலைட்டர், லிப் கிளாஸ் அல்லது க்ரீமி லிப்ஸ்டிக் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
முதலில் உங்கள் முகத்தை மாய்ஸ்சரைசர் கொண்டு ஹைட்ரேட்டிங் செய்து கொள்ள வேண்டும். பிறகு லைட் வெயிட் பவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு இயற்கையான பளபளப்பை தரும்.
Image Source: pexels-com
உங்கள் கண்கள் மற்றும் கன்னங்களுக்கு லைட் கலர் ஷேடோக்களை பயன்படுத்த வேண்டும். ரோஸி பிங்க்ஸ், பீச் கலர் ஐ ஷேடோ மற்றும் ப்ளஷ்யை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு இளமையான லுக்கை கொடுக்கும்.
Image Source: istock
இப்பொழுது கண்களை அழகுபடுத்த வேண்டும். அதற்கு மஸ்காராவை எடுத்து கண் இமைகளுக்கு நீளமான லுக்கை கொடுக்கும் மாதிரி அப்ளை செய்யுங்கள். ஐ ப்ரோ பென்சிலை எடுத்து புருவங்களை பூர்த்தி செய்யுங்கள்.
Image Source: istock
பளபளப்பான ஹைலைட்டிங் கொடுக்க க்ரீமி அல்லது லிக்யூட் ஹைலைட்டரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் உள்ள உயர்ந்த இடங்களான கன்னங்கள், புருவெலும்புகள், புருவ வளைவு இவற்றில் ஹைலைட்டரை பயன்படுத்துங்கள்.
Image Source: pexels-com
இப்பொழுது உதடுகளை அழகுபடுத்த லிப் க்ளாஸ் அல்லது க்ரீமி லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். நேச்சுரல் லைட் கலர்களை பயன்படுத்த வேண்டும்.
Image Source: istock
இந்த மேக்கப் உங்களுக்கு லைட்டான லுக்கை கொடுத்தாலும் எந்த நிகழ்ச்சியிலும் ஜொலிப்பாக தெரிவீர்கள். சிம்பிள் மேக்கப் ஆனால் உங்களுக்கு ஒரு ஆடம்பரமான ரிச் லுக்கை கொடுக்கும்.
Image Source: pexels-com
நடிகை ஜான்வி கபூர் கூட மைதான் பட நிகழ்ச்சிக்கு இந்த மேக்கப்பை தான் போட்டு வந்துள்ளார். லேசான பீச் நிற மேக்கப்புடன் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறம் கலந்த ஐ ஷேடோ போட்டு இருந்தார். மூக்கு, கன்னங்களில் பயன்படுத்தி இருந்தார். பிறகு உதட்டிற்கு பீச் கலர் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்
Image Source: instagram-com/stylebyami
Thanks For Reading!