Jul 30, 2024
நம்முள் பலருக்கும் ஹார்மோன்கள் என்பது என்னவென்று தெரியாது. ஹார்மோன்கள் என்றால் நமது உடலில் உருவாகும் ஒரு வகை ரசாயன பொருளாகும். இந்த ஹார்மோன்கள் சதைப்பகுதி, தசைகள், திசுக்கள் உள்ளிட்டவைகளோடு இணைந்து ரத்தம் வழியே உடலில் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவி புரிகிறது.
Image Source: istock
நமது உடலில் இந்த ஹார்மோன் என்னும் ரசாயன மாற்றம் ஏற்படும் பொழுது இனப்பெருக்கம், தூக்கத்தின் சுழற்சி, மனநிலை, வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றை சரிவர இயங்க செய்கிறது. இதுவே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்மோன்கள் அதன் அளவீடுகளில் இருந்து குறைந்தோ, அதிகரித்து காணப்பட்டாலோ அதை தான் ஹார்மோன் சமநிலையின்மை என்று கூறுகிறார்கள்.
Image Source: istock
இந்நிலையில் ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தினை மேலும் அதிகரிக்கவும் நாம் எடுத்து கொள்ளும் அன்றாட உணவு வழக்கங்களில் அதிகளவு ஊட்டசத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த விதைகளையும் குறிப்பாக பெண்கள் சாப்பிட வேண்டும்.
Image Source: istock
ஒரு தேக்கரண்டி ஆளிவிதைகளை நன்கு வறுத்து எடுத்து அதனை தயிர், சாலட், ஸ்மூத்தி, மோர், தண்ணீர் உள்ளிட்டவைகளோடு சேர்த்து சாப்பிடலாம். இந்த விதைகள் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது, பெண்களின் ஹார்மோன் மாற்றங்களை சீராக்கவும் உதவுகிறது.
Image Source: istock
பூசணி விதைகளை எடுத்து கொண்டால் அது ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்யக்கூடும். இந்த விதைகளில் ஒமேகா 3, துத்தநாகம், மெக்னீசியம் உள்ளிட்டவை அடங்கியுள்ளது, இது புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவை சமப்படுத்துகிறது. பூசணி விதைகளை பழங்கள், சாலட்கள் போன்ற உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
Image Source: istock
எள் விதைகளில் துத்தநாகம் அதிகரித்து காணப்படுகிறது. இது ப்ரோஜெஸ்டிரானை கட்டுப்படுத்தி, ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி அதிகளவு ஏற்படாமல் தடுக்கிறது. இந்த விதைகளை சப்பாத்தி மாவு, காய்கறிகள், சட்னி போன்ற பல்வேறு உணவு பொருட்களோடு சேர்த்து சாப்பிடலாம்.
Image Source: istock
இந்த சியா விதைகளில் ஆரோக்கியமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் செரிமானத்தினை தூண்டும். ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்ய உதவும் இந்த விதைகளை, கிட்டத்தட்ட 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவிட்டு பிறகு அதனை தயிர், ஜூஸ் போன்றவைகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
Image Source: istock
இந்த வகை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹார்மோன் அளவுகள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதிலுள்ள அதிகளவு இரும்புசத்து ரத்த சோகை பிரச்சனையையும் குணப்படுத்துகிறது.
Image Source: istock
தற்போதைய காலகட்ட பெண்கள் தங்களது ஹார்மோன் அளவுகளை சீராக வைத்திருக்க இந்த விதைகளை சாப்பிடலாம். எனினும், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் தொந்தரவுகள் அதிகமானால் உடனடியாக உங்களது மருத்துவரை அணுகி இதுகுறித்த தெளிவினை பெறுங்கள்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!