[ad_1] ​பெண்களுக்கான நேர நிர்வாகம், சில பயனுள்ள குறிப்புகள்

​பெண்களுக்கான நேர நிர்வாகம், சில பயனுள்ள குறிப்புகள்

Jul 2, 2024

By: Nivetha

பெண்கள்

பெண்கள் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் குடும்பத்தையும் கவனித்து, குழந்தைகளையும் பராமரித்து, வேலைக்கும் செல்வதால் அவர்கள் நேரத்தை மேனேஜ் செய்து பேலன்ஸ் செய்வது என்பது அவசியமாகிறது.

Image Source: pexels

உடல் ஆரோக்கியம்

குடும்பத்தில் இருக்கும் அனைவரது ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். சிறிது நேரம் தினமும் வெர்க் அவுட், தியானம், யோகா போன்றவற்றை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

Image Source: pexels

நமக்கான நேரம்

பெண்கள் குடும்பம், வேலை என்று ஓடினாலும் தங்களுக்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். புத்தகம் படிப்பது, இசை கேட்பது என நமக்கு பிடித்தமான விஷயங்களில் நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பெண்களின் மன சந்தோஷம் மேம்படும்.

Image Source: pexels

கிச்சன்

பெண்களது பெரும்பாலான நேரம் கிச்சனில் தான் போகிறது. அதற்கு மாற்றாக மறுநாள் சமையலுக்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து, காய்கறிகளை முந்தைய தினமே நறுக்கி வைத்து கொள்வது காலையில் பதற்றத்தை தவிர்க்க உதவும்.

Image Source: pexels

முன்னேற்பாடுகள்

ஒருவார சமையலுக்கு தேவையான தேங்காய்களை துருவி வைப்பது, இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து வைப்பது, புளிக்கரைசலை வடிகட்டி ப்ரிட்ஜில் எடுத்து வைப்பது, இட்லி பொடி, பருப்பு பொடி உள்ளிட்ட பொருட்களை வார இறுதி நாட்களில் தயார் செய்து கொண்டால் சமையலின் நேரம் குறையும்.

Image Source: pexels

குழந்தைகளுக்கும் பழகுங்கள்

உங்களது வேலையில் குழந்தைகளையும் ஈடுபடுத்த பழகுங்கள். அனைத்து வேலைகளையும் நீங்களே செய்தால் அவர்கள் வளர்ந்த பின்னரும் நீங்களே செய்யக்கூடிய சூழல் ஏற்படும். இது குழந்தைகளுக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் ஓய்வு கிடைக்காமல் போய்விடும்.

Image Source: pexels

வருத்தி கொள்ள அவசியமில்லை

சில பெண்கள் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு தாங்களே செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அது தவறு, வேலைகளை கணவன், குழந்தைகளுடன் பகிர்ந்து செய்து பழகுங்கள்.

Image Source: pexels

சவாலான விஷயம்

குடும்பத்தையும் கவனித்து, பணிசுமைகளையும் பேலன்ஸ் செய்வது என்பது நிஜத்தில் ஒரு சவாலான விஷயம் தான். ஆனால் இதனை பல பெண்கள் செய்ய கற்றுக்கொண்டு வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

Image Source: pixabay

வெர்க் லைஃப் பேலன்ஸ்

ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்வதை விட இஷ்டப்பட்டு செய்தால் வெர்க் லைஃப் பேலன்சிற்கு மிகவும் உதவும்.

Image Source: pixabay

Thanks For Reading!

Next: திருமண உறவில் உங்க மனைவி 'பாதுகாப்பாக' உணர என்ன செய்யனும் தெரியுமா?

[ad_2]