Jun 12, 2024
By: Anojபெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த உணவாக பூண்டு திகழ்கிறது. அதிலுள்ள வலுவான ஆன்டி ஆக்ஸிடன்ட், உடலிலுள்ள நச்சுக்களை போக்கி கருவுறுதலை அதிகரிக்க செய்கிறது. அது பாலியல் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பூண்டில் உள்ள செலினியம் மற்றும் வைட்டமின்கள், குரோமோசோம் குறைபாட்டை தடுப்பதோடு இனப்பெருக்கு உறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம், பெண்களுக்கான கருத்தரிக்கும் வாய்ப்பும் மேம்படுகிறது
Image Source: pexels-com
PCOS எனும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் கோளாறு ஆகும். இது கருத்தரிப்பதை சவாலானதாக மாற்றும். ஆனால், பூண்டில் பிசிஓஎஸ் அறிகுறிகளைப் போக்கும் பண்புகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
Image Source: istock
பெண்களின் பாலியல் உணர்வு, மன ஆரோக்கியத்துடன் வலுவான தொடர்பை கொண்டுள்ளது. பூண்டு சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் கவலையை போக்கி மிகவும் ரிலாக்ஸாக உணர வைக்கும்.
Image Source: istock
பூண்டில் காணப்படும் allicin எனும் கலவை, இனப்பெருக்க உறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் செயல்பாட்டை துரிதப்படுத்த செய்கிறது. இந்த மாற்றம் ஓவர்நைட்டில் நடைபெற செய்யாது. ஆனால், தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், நல்ல மாற்றத்தை உணரலாம்
Image Source: istock
பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அவை ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை பாதுகாக்கக்கூடும். கூடுதலாக, பாலியல் ஆரோக்கியத்திலும் முக்கியமான பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது. இது உங்க துணையின் விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்கவும் பயன்படுகிறது
Image Source: istock
பிறப்புறுப்பு ஆரோக்கியம் மேம்படுத்த பூண்டு சிறந்த தேர்வாகும். அது பிறப்புறுப்பின் Ph அளவை பராமரித்து பாக்டீரியா போன்ற தொற்று தாக்குதலை எதிர்த்து போராட உதவும். மேலும், பாலியல் பிரச்சினைகள் தொடர்புடைய வீக்கத்தை குறைக்கவும் உதவும்
Image Source: istock
கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் 'அண்டவிடுப்பு'க்கு முன்பு தினமும் 1 பிரஷ் பூண்டு வாயில் போட்டு மென்று சாப்பிடுவது கருதரிப்பதை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. நீங்களும், பார்ட்னரும் ஒரே நேரத்தில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது
Image Source: istock
கருவுறுதலை அதிகரிக்க பூண்டு - தேன் தேநீர் சிறந்த பானமாகும். பூண்டு பற்களை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்ட வேண்டும். அத்துடன் தேனை சேர்த்து அதிகாலையில் குடித்து வந்தால் எதிர்பார்த்த பலனை அடைய முடியும்
Image Source: istock
Thanks For Reading!