Jul 22, 2024
சூரிய காந்தி விதைகள் பெண்களுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகையாகும். இதில் நார்ச்சத்துக்கள், கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பெண்களின் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
Image Source: istock
சூரிய காந்தி விதைகளில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது துத்தநாகத்தை வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
Image Source: istock
சூரிய காந்தி விதைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
Image Source: istock
சூரிய காந்தி விதைகள் அழற்சியை குறைக்க உதவுகின்றன. சூரிய காந்தி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நாள்பட்ட அழற்சியை போக்குகிறது.
Image Source: istock
சூரிய காந்தி விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக வைக்கிறது.
Image Source: pexels-com
சூரிய காந்தி விதைகள் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. விட்டமின் ஈ உள்ளது. இது முன்கூட்டியே வயதாகுவது மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
சூரிய காந்தி விதைகளில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. குடல் இயக்கத்திற்கு தேவையான நார்ச்சத்துக்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Image Source: istock
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான பாஸ்பரஸ் இதில் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.
Image Source: istock
ஆய்வின் படி, சூரிய காந்தி விதைகளில் விட்டமின் ஈ இருப்பதால் அது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்
Image Source: istock
Thanks For Reading!