Jun 5, 2024
பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றில் அதிக இரும்புச்சத்தும், அவற்றை தக்க வைத்துக் கொள்ளும் வைட்டமின் சி.,யும் உள்ளது.
Image Source: iStock
கோழி, வான்கோழி ஆகியவற்றின் இறைச்சியில் அதிகம் இரும்புச்சத்து உள்ளை. இவற்றை எண்ணெய்யில் பொறிக்காமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
Image Source: iStock
இரும்புச்சத்துக்களை பெறுவதற்கு எளிமையான வழி ஆட்டு இறைச்சி ஆகும். இது இரும்புச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையையும் அதிகரிக்க செய்கின்றது.
Image Source: iStock
மட்டி உள்ளிட்ட மீன் வகைகளில் அதிக இரும்புச்சத்து உள்ளது. அதே போல் இரால், சிப்பி வகைகளிலும் இரும்புச்சத்துக்கள் உள்ளன.
Image Source: iStock
பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி ஆகியவற்றில் ஹீம் அல்லாத இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்தும் அதிகம்.
Image Source: Samayam Tamil
எள், முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ்களில் இரும்புச்சத்து அதிகம். இவற்றை ஸ்நாக்ஸ் போலவோ, சாலட் மற்றும் ஓட்ஸ் உடல் கலந்தோ கூட சாப்பிடலாம்.
Image Source: iStock
பிரவுன் ரைஸ், குயினோவா, செறிவூட்டப்பட்ட தானியங்கள் ஆகியவற்றில் இரும்புச்சத்துடன் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன.
Image Source: iStock
சோயாவை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் உணவுகள் இரும்புச்சத்து பெறுவதற்கு மிகவும் ஏற்றவை. இது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்றதாகும்.
Image Source: iStock
உலர்ந்த ஆப்ரிகாட், திராட்சை, கொடிமுந்திரி ஆகியவற்றிலும் இரும்புச்சத்துக்கள் அதிகம். இவற்றை தினமும் உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
Image Source: iStock
Thanks For Reading!