Aug 12, 2024
By: Suganthiபெற்றோர்களின் குணநலன்கள் தான் குழந்தைக்கு பிரதிபலிக்கும் என்பார்கள். ஏனெனில் பெற்றோர்கள் தான் குழந்தைகளின் ரோல் மாடல். அந்த வகையில் பெற்றோர்கள் செய்யும் ஒரு சில தவறுகள் குழந்தைகளின் குணநலத்தையும் மாற்றி சுயநலவாதியாக வாழ வழிவகுக்கிறது
Image Source: pexels-com
குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தால் குழந்தைக்கு உழைப்பின் அருமை தெரியாமல் போய் விடும். கடின உழைப்பு மற்றும் நன்றியுணர்வு அவர்களுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது. இதனால் அவர்கள் சுயநலவாதியாக மாற வாய்ப்பு உள்ளது.
Image Source: pexels-com
குழந்தைகளுக்கு நீங்கள் சரியான எல்லைகளை அமைக்காவிட்டால் எதையும் நாம் செய்யலாம் என்ற எண்ணம் உண்டாகி விடும். இதனால் ஒழுக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களின் எல்லைகளை மதிக்கும் எண்ணம் இல்லாமல் சுயநலவாதியாக இருப்பார்கள்.
Image Source: pexels-com
பெற்றோர்களின் சீரற்ற நடத்தை காரணமாக குழந்தைகள் சுயநலவாதியாக இருக்கலாம். இதனால் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் சுயநலவாதியாக வளர ஆரம்பிப்பார்கள்.
Image Source: pexels-com
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் குழந்தைகள் சுயநலம் கொண்டவர்களாக மாறுவார்கள். அவர்களின் தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.
Image Source: pexels-com
குழந்தைகள் பொறுப்புணர்வை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். அது இல்லாமல் இருப்பது மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாமல் போய் விடும்.
Image Source: pexels-com
குழந்தைகளை சாதனைகளை நோக்கி வளர்க்கும் போது அவர்களுக்கு அதில் ஒரு அழுத்தத்தை உண்டாக்கி சுயநல நடத்தைக்கு வழி வகுக்கும். வெற்றிக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதால் அவர்கள் சுயநலவாதியாக மாற வாய்ப்பு உள்ளது.
Image Source: pexels-com
குழந்தைகளுக்கு அவர்களின் வேலைகள் மற்றும் பொறுப்புகள் தெரியாமல் இருந்தால் சமூகத்திற்கான பங்களிப்பை குழந்தைகள் தெரிந்து கொள்ளாமல் போகலாம். இதுவும் சுயநல உணர்வை வளர்க்கும்.
Image Source: pexels-com
பெற்றோர்களிடம் கருணை மற்றும் பெருந்தன்மை இல்லாவிட்டால் அது குழந்தைகளிடம் வருவது கடினம். இதுவும் குழந்தைகளை சுயநலத்திற்கு கூட்டிச் செல்லலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!