[ad_1] பெற்றோர்கள் இந்த தவறுகள் செய்வதால் தான் குழந்தைகள் பொய் சொல்ல தொடங்குகிறார்கள்

பெற்றோர்கள் இந்த தவறுகள் செய்வதால் தான் குழந்தைகள் பொய் சொல்ல தொடங்குகிறார்கள்

Aug 12, 2024

By: Suganthi

குழந்தைகள் பொய் சொல்வது

பெற்றோர்களின் ஒரு சில நடத்தைகள் குழந்தைகளை பொய் சொல்லத் தூண்டுவிடலாம். சில சமயங்களில் அவர்களின் தவறுகளுக்காக அதிக தண்டனையை கொடுப்பது, எதிர்பார்ப்புகளை பொய்யாக்குவது போன்ற செயல்களால் குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள்.

Image Source: pexels-com

தவறுகளை மிகைப்படுத்துதல்

குழந்தைகள் செய்யும் சிறிய தவறைக் கூட பெற்றோர்கள் பெரிதாக்கும் போது குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள். பெற்றோரின் தண்டனைக்கு பயந்து குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்கலாம்.

Image Source: istock

அதிகமான எதிர்ப்பார்ப்புகள்

குழந்தைகள் பெரிய விளையாட்டு வீரர்களாக வர வேண்டும், மருத்துவராக வர வேண்டும் போன்று தங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். எனவே இந்த எதிர்ப்பார்ப்புகளை குழந்தை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் போது பொய் சொல்ல நேரிடலாம்.

Image Source: pexels-com

நேர்மையை கண்டித்தல்

குழந்தைகள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்ளும் போது அதை தண்டிப்பது குழந்தைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தலாம். எனவே கடுமையான தண்டனைகளை தடுக்க குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள்.

Image Source: istock

விதிகளில் உள்ள முரண்பாடுகள்

பெற்றோர்கள் முரண்பாடற்ற விதிகளை விதிக்கும் போது அதை குழந்தைகள் மீறும் போது பொய் சொல்லத் தொடங்குகின்றனர். விதிகளை மீறும் போது குழந்தைகள் பொய் சொல்லலாம்.

Image Source: pexels-com

பெற்றோர்களின் நடத்தை

பெற்றோர்கள் சின்ன சின்ன பொய்கள் சொல்லும் போது அதை பார்க்கும் குழந்தைகளும் பொய் சொல்ல நேரிடலாம். பெற்றோர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு இப்படி செய்ய வாய்ப்புள்ளது.

Image Source: pexels-com

நம்பிக்கை இல்லாமை

பெற்றோர்கள் அதிக சந்தேகம் கொண்டவர்களாகவும், குழந்தைகளை நம்பாதவர்களாக இருக்கும் போது குழந்தைகளின் நடத்தையை கண்காணிக்கும் போது அவர்கள் பொய் சொல்லுகின்றனர்.

Image Source: pexels-com

வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்

பெற்றோர்கள் குழந்தைகள் எப்படியாவது எல்லா போட்டிகளிலும் வென்று விட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் போது குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே பெற்றோரை ஏமாற்றுவதற்காக அவர்கள் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள்.

Image Source: istock

தொடர்பு சிக்கல்கள்

ஒரு நேர்மறையான சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுக்காத போது, அவர்கள் பேசுவதை கேட்க நட்பு வட்டாரங்கள் இல்லாத போது அவர்கள் பொய் பேசத் தொடங்கலாம்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: சிறு குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படாமல் தடுப்பது எப்படி?

[ad_2]