[ad_1] பேச்சிளர் ரூம் ஸ்பெஷல் ‘பசலை கீரை கடையல்’ செய்முறை!

Aug 8, 2024

பேச்சிளர் ரூம் ஸ்பெஷல் ‘பசலை கீரை கடையல்’ செய்முறை!

mukesh M

பசலை கீரை கடையல்!

மிகவும் குறைந்தளவு பொருட்களை பயன்படுத்தி, மிகவும் எளிமையான முறையில் கடையல் ஒன்றினை பசலை கீரை பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

பசலை கீரை - 1 கட்டு | எண்ணெய் - 3 3 ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | மல்லி விதை - 2 ஸ்பூன் | காய்ந்த மிளகாய் - 6 | வேர்க்கடலை - 1 கப் | கடலை பருப்பு - 2 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

மஞ்சள் - 1 ஸ்பூன் | பூண்டு பல் - 6 | வெங்காயம் - 1 | பச்சை மிளகாய் - 2 | இஞ்சி - 1" அளவு | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | உப்பு - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட பசலை கீரையை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தொடர்ந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றையும் நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் சீரகம், மல்லி விதை, கா.மிளகாய், வேர்க்கடலை, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பதமகா வறுத்து எடுத்து நன்கு ஆற விடவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

பின் இந்த சேர்மத்தை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்க்கவும். உடன் மஞ்சள், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது பசலை கீரை கடையல் தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, சீரகம், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து பசலை கீரை சேர்த்து வதக்கவும்!

Image Source: istock

பசலை கீரை கடையல் ரெடி!

பின் இதனுடன் மிளகாய் பொடி, உப்பு, அரைத்து வைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் நீங்க வதக்கி பின் இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க சுவையான பசலை கீரை கடையல் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: கேரளா ஸ்பெஷல் 'பாசிப்பயறு கஞ்சி' செய்முறை

[ad_2]