Jul 25, 2024
ஒரு மனிதனுக்கு சரியான வாழ்க்கை முறை இல்லையெனில் அவன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறான். சரியான நேரத்தில் உணவு, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மாறிவிட்ட வாழ்க்கை முறை ஆகியன உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த மலச்சிக்கல்.
Image Source: istock
தற்போதைய அவசர காலத்தில் அதிகளவு மலச்சிக்கல் பிரச்சனை இருந்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தற்போது அதிகளவில் கிடைக்கும் துரித உணவுகள் தான். இதனை தொடர்ந்து எடுத்து கொள்ளும் பட்சத்தில் வயிற்றில் எரிச்சல், கோபம், மனஅழுத்தம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
Image Source: pixabay
மலச்சிக்கல் பிரச்சனை தொடரும் பட்சத்தில் இது பைல்ஸ் பிரச்சனையாக மாறுகிறது. இதற்கு முக்கிய காரணம் மனிதர்களின் உணவு வகைகளில் ஏற்படும் மாற்றங்கள் தான். எனவே, மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பக்கட்டத்திலேயே அதனை குணப்படுத்தி கொள்வது நல்லது.
Image Source: istock
பைல்ஸ் நோய் பாதிப்பினை வராமல் தடுக்க ஒரு சில குறிப்புகள் உள்ளன. அந்த குறிப்புகள் என்னவென்று இப்பதிவினை படித்து தெரிந்து கொண்டு, அதனை பின்பற்றுங்கள். நிச்சயம் பைல்ஸ் பிரச்சனையை வராமல் தடுக்கலாம்.
Image Source: pexels
வாழைப்பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுக்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தினை மேம்படுத்தும். மேலும் வாழைப்பழத்தில் நிறைந்துள்ள நார்சத்து ஆரோக்கியமான குடல் இயக்கத்தினை ஊக்குவிக்க உதவுகிறது.
Image Source: istock
பைல்ஸ் பிரச்சனை வராமல் தடுக்க தினமும் வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அதில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால் நன்றாக பழுத்த வாழைப்பழங்களை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்பது தான்.
Image Source: pixabay
பழுத்த வாழைப்பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்றால், எளிதான செரிமானத்தினை இது ஊக்குவிக்கும் என்பதால் தானாம். மேலும் சரியான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கும் இது உதவுகிறதாம். அதே சமயம் நாள்பட்ட வாழைப்பழங்களை எடுத்து கொள்ளகூடாது .
Image Source: pixabay
மற்ற உணவுகள் இன்றி நேரடியாக வாழைப்பழங்களை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமான ஒன்று, வாழைப்பழங்களை சாப்பிடுகையில் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Image Source: Samayam Tamil
உங்களுக்கு பைல்ஸ் பிரச்சனை இருக்கிறது என்றால் பால் சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழுக்காத பழங்கள், குறிப்பாக பழுக்காத வாழைப்பழங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதே போல் இரும்புச்சத்து அதிகமுள்ள மாத்திரைகள், உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
Image Source: pixabay
Thanks For Reading!