Jul 25, 2024
ஜெரனியம் பூக்களிடம் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை கூந்தலின் ஒட்டுமொத்த பிரச்சனைகளை சில துளிகளில் தீர்த்துவிடுமாம். அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
ஜெரனியம் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையில் பூஞ்சை வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், PH அளவை சமநிலைப்படுத்தி பொடுகை குறைக்கவும் உதவி புரிகிறது
Image Source: istock
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஆகியவை, முடி உதிர்வுக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல் எதிர்த்து போராட உதவக்கூடும். மேலும், உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி உதிர்வை குறைத்திட உதவி புரிகிறது
Image Source: istock
ஜெரனியம் எண்ணெய், உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், ஈரப்பதத்தை தக்கவைத்து வறண்ட தலைமுடி ஏற்படுவதையும் தடுக்க செய்கிறது
Image Source: istock
இந்த எண்ணெயின் கலவைகள், உச்சந்தலை தொற்று பாதிப்பை உண்டாக்கும் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கக்கூடும். மேலும், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் சிவத்தல் மற்றும் வலி ஏற்படாமல் பாதுகாக்கும்
Image Source: istock
ஜெரனியம் எண்ணெயில் உள்ள அமினோ அமிலங்கள், புரோட்டீனாக செயல்பட்டு கூந்தலை வலுவாக்கக்கூடும். இதன் மூலம், நுனி முடி பிளவு, முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறையக்கூடும்
Image Source: istock
5 சொட்டு ஜெரனியம் எண்ணெயுடன், 2 சொட்டு தேங்காய் எண்ணெயை மிக்ஸ் செய்யுங்கள். அதை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். சுமார் 15 நிமிடங்கள் பின் மைல்டு ஷாம்பு கொண்டு வாஷ் செய்யுங்கள்
Image Source: pexels-com
3 டீஸ்பூன் ஜெரனியம் எண்ணெய், 2 சொட்டு ரோஸ்மேரி ஆயில், 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேனை பயன்படுத்தி முடி பிரச்சனைகளை போக்கும் ஹேர் மாஸ்க் ரெடி செய்யலாம்
Image Source: pexels-com
ஒரு பவுலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்யவும். இந்த கலவையை ஈரப்பதமான கூந்தலில் தேய்த்து, 20 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்யலாம். வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது செய்ய வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!