May 25, 2024
எண்ணெய் மற்றும் எரிச்சல் கொண்ட உச்சந்தலை, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது, சென்ஸ்டிவ் உச்சந்தலை, உச்சந்தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்று இவற்றால் பொடுகுத் தொல்லை ஏற்படுகிறது.
Image Source: istock
முட்டையின் மஞ்சள் கரு புரோட்டீன்கள் நிறைந்தது. முட்டையில் பயோட்டின், சல்பர் உள்ளது. இது பொடுகுத் தொல்லையை எதிர்த்து போராட உதவுகிறது. ஆலிவ் ஆயில் கூந்தலை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
முட்டையின் மஞ்சள் கரு 2, 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
Image Source: istock
இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் இருந்து கூந்தல் நுனி வரை அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே விட வேண்டும்.
Image Source: pexels-com
பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசுங்கள். கூந்தல் பளபளப்பாகவும் அதே நேரத்தில் பொடுகுத் தொல்லை இன்றியும் இருக்கும்.
Image Source: istock
முட்டையின் மஞ்சள் கருவில் பயோட்டின், விட்டமின் ஏ மற்றும் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது கூந்தல் உதிர்தலை குறைக்கிறது. கூந்தல் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது
Image Source: istock
ஆலிவ் ஆயில் இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்கி உச்சந்தலைக்கு நீரேற்றத்தை வழங்குகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.
Image Source: istock
இந்த முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை என பயன்படுத்தி வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை நீங்கி விடும்.
Image Source: istock
Thanks For Reading!