[ad_1] பொரி தோசை செய்வது எப்படி ?

Aug 21, 2024

BY: Nivetha

பொரி தோசை செய்வது எப்படி ?

காலை உணவு

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று, இதனை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பொதுவாக நம்முள் பலரது வீட்டில் அன்றாட காலை உணவாக தோசை அல்லது இட்லி தான் செய்வார்கள். சிலருக்கு இதனை சாப்பிட்டு போரடித்து இருக்கும்.

Image Source: istock

மாற்று வழி

அதேபோல் ஒரு சில நேரம் வீட்டில் மாவு இருக்காது, கடைக்கு சென்று வாங்குவதற்கு நேரமும் இருக்காது. அப்படி ஒரு சூழலில் உங்கள் வீட்டில் அதிகளவு பொரி இருந்தாலே போதும். விரைவில் சுவையான தோசையை தயார் செய்து விடலாம். முக்கியமாக இந்த பதிவு வேலைக்கு செல்லும் பெண்மணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: istock

தேவையான பொருட்கள்

அவசரக்காலத்தில் செய்யக்கூடிய இந்த பொரி தோசைக்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம். பொரி 2 கப், கோதுமை மாவு அரை கப், தயிர் அரை கப், உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு, சிறிதளவு தண்ணீர்.

Image Source: istock

செய்முறை

நீங்கள் எடுத்து வைத்துள்ள 2 கப் பொரியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது முழுகும் அளவிற்கு அந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள், நன்கு கிளறி விட்டு ஒரு மூடியை போட்டு மூடி ஒரு 10 நிமிடங்கள் நன்கு தண்ணீரில் ஊற விடுங்கள்.

Image Source: istock

அரைத்து கொள்ளுங்கள்

10 நிமிடங்களுக்கு பிறகு நன்கு ஊறிய அந்த பொரியை எடுத்து நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையான பதத்தில் இருக்குமாறு அரைத்து கொள்ளுங்கள்.

Image Source: istock

கோதுமை, தயிர்

அடுத்து எடுத்து வைத்துள்ள அரை கப் தயிர் மற்றும் அரை கப் கோதுமை மாவை அரைத்த பொரியோடு சேர்த்து, நன்கு அரைத்து கொள்ளுங்கள். மென்மையாக இருப்பது தான் இந்த தோசை ரெசிபிக்கான சரியான பதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Image Source: istock

உப்பு

பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். தோசை மாவு போல் ஒருசேர கலந்து விட வேண்டும். அடுத்ததாக அடுப்பில் தோசை கல்லை வைக்கவும்.

Image Source: istock

தோசை தயார்

தோசை கல் சூடான பிறகு, அதில் இந்த மாவினை எடுத்து ஊற்றி மெல்லிய தோசை வருவது போல் தேய்த்து விடுங்கள். எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் புரட்டி வேக விட்டு எடுத்தால் சுவையான பொரி தோசை தயார்.

Image Source: pexels

தக்காளி சட்னி

இந்த சுவையான பொரி தோசைக்கு தக்காளி சட்னி சிறந்த காம்பினேஷனாக இருக்கக்கூடும். ஒரே சுவையில் சாப்பிடுவதற்கு பதில், இது போல் வித்தியாசமான முறையில் தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: தயிர் வெண்டைக்காய் கூட்டு - செய்முறை!

[ad_2]