Jul 19, 2024
By: Nivethaதற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதோர் எங்கும் இல்லை. போன் இல்லாமல் ஒருமணி நேரம் கடப்பதும் கடினம் தான், இந்நிலையில் இதற்கு சரியான முறையில் சார்ஜ் செய்ய வேண்டும் இல்லையெனில் இதன் ஆயுள் குறையும்.
Image Source: istock
போன் சார்ஜ் ஏறிய பின்னரும் அதனை மின்சாரத்துடன் அடிக்கடி இணைப்பது அதன் பேட்டரியை பாதிக்கிறது.
Image Source: pexels
போன் பேட்டரி பாதிப்படைவதை தவிர்க்க ஒரு சில குறிப்புகளை இப்பதிவில் காண்போம் வாருங்கள்.
Image Source: pexels
போன் பேட்டரி பாதிப்படைவதை தவிர்க்க போனில் 20 சதவீதம் சார்ஜ் இருக்கும் போதே சார்ஜ் செய்யவும். அதே போல் 80-90% சார்ஜானதும் சார்ஜர் இணைப்பினை துண்டிக்கவும்.
Image Source: pexels
போன் 0% சார்ஜ் இறங்கி விட்டால் சார்ஜரில் இணைக்கும் பொழுதும் பயன்படுத்தும் பொழுதும் பேட்டரி மிகவும் சூடாகி விடும்.
Image Source: pexels
அதே போல் போனில் சார்ஜர் 80%ஆன பிறகும் இணைப்பில் இருக்கும் பட்சத்தில் போன் பேட்டரியின் செயல்திறன் குறைய அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
போனின் பேட்டரி சேதமடைவதை தடுக்க போனை குளிர்ந்த மற்றும் உலர்ந்த சூழலில் வைக்க வேண்டும்.
Image Source: pexels
இந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஒரு சில போன்களின் பேட்டரி அதிகளவு சார்ஜ் ஏறினாலும் அதன் பேட்டரி பாதிப்படையாது என்றும் கூறுகிறார்கள்.
Image Source: pexels
அவ்வாறு பாதிப்படையாமல் இருக்க காரணம் என்னவென்றால், சில போன்களில் முழுமையாக பேட்டரி சார்ஜ் முழுமையடைந்ததும் தானாகவே சார்ஜிங்கை துண்டிக்கும் சிறப்பு அம்சங்கள் அதில் பொருத்தப்பட்டிருக்கும்.
Image Source: pexels
Thanks For Reading!