[ad_1] போர் புரிய ஆசையா? எதிரிகளை பந்தாடும் ஆண்ட்ராய்டு கேம்!

போர் புரிய ஆசையா? எதிரிகளை பந்தாடும் ஆண்ட்ராய்டு கேம்!

Jul 1, 2024

By: Anoj

Frontline Heroes WW2 Warfare

இது 2ஆம் உலக போரை பிரதிபலிக்கும் ஷூட்டிங் கேம்மாகும். கடற்கரை, வயல், சாலை, மலைத்தொடர் என அனைத்து இடங்களிலும் சண்டையிட வேண்டும். இந்த போர் சண்டையில் வெற்றிபெற பின்பற்ற வேண்டிய யுத்திகளை இங்கு பார்க்கலாம்

Image Source: playstore-com

மறைந்திருந்து தாக்குதல்

எதிரிகளை மறைந்திருந்து தாக்க வேண்டும். அச்சமயத்தில் எதிரிகளின் குண்டு உங்களை தாக்க செய்யாது. நீங்கள் சுடுவதற்கு எழுந்திருக்கும் போது மட்டுமே அவர்களால் தாக்க முடியும்.

Image Source: playstore-com

எதிரி சுடுவதை கவனிப்பது

எதிரிகள் முதலில் மறைந்துகொள்வார்கள். பிறகு சில குண்டுகளை சுட்டுவிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடுவார்கள். பிறகு மீண்டும் ஒளிந்து கொள்வார்கள். இதை சரியாக கவனித்து சுட்டால் ஹெல்த் லெவல் குறையாமல் எளிதாக வென்றுவிடலாம்

Image Source: playstore-com

3 வகையான ஆயுதங்கள்

அருகில் இருப்போரை சுடுவதற்கு SMGs எனும் ஆட்டோமேட்டிக் துப்பாக்கியும், தூரத்தில் இருப்போரை சுடுவதற்கு ஸ்னைப்பர் துப்பாக்கியும் பயன்படுத்த வேண்டும். எதிரிகள் கும்பலாக வரும் பட்சத்தில், மிஷின் கன் உபயோகிக்க வேண்டும்

Image Source: playstore-com

வெடிக்கக்கூடிய பொருட்கள்

எதிரிகளை எளிதில் வீழ்த்திட, அவர்களுக்கு அருகிலுள்ள வெடிக்கக்கூடிய பொருட்களை டார்கெட் செய்ய வேண்டும். இச்செயல் மூலம் ஒரே நேரத்தில் பல வீரர்களையும் கொல்ல முடியும்

Image Source: playstore-com

மெடிகிட் பயன்பாடு

மெடிகிட்டை உடல்நிலை மோசமான நிலையை எட்டும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவை எளிதாக கிடைத்திட செய்யலாம். விளம்பரம் பார்ப்பது அல்லது கோல்டு செலவழித்து மட்டுமே மெடிகிட் பெற முடியும்

Image Source: playstore-com

கூடுதல் வெகுமதிகள்

நீங்கள் சுட்டு வீழ்த்திய எண்ணிக்கை, தலையில் சுட்டது மற்றும் ஹெல்த் அளவு பொறுத்து லெவல் முடிக்கையில் கூடுதல் வெகுமதிகள் கிடைக்கக்கூடும். இதுதவிர, 10 லெவல் முடிக்கையில் அதிக வெகுமதிகள் இருக்கும் பெட்டியும் கிடைக்கக்கூடும்

Image Source: playstore-com

ஆயுதங்கள் அப்டேட்

போரில் வெற்றிபெற ஆயுதங்களை அப்டேட் செய்வது மிகவும் அவசியமாகும். அதற்கான கார்டுகள் அவ்வப்போது கிடைக்கக்கூடும். இதுதவிர, பணம் அளித்து (அ) கோல்டு கொடுத்தும் ஆயுதங்களை அப்கிரேட் செய்யலாம்

Image Source: playstore-com

போரில் வெற்றி

இந்த கேமில் வெற்றிபெறுவது எளிது கிடையாது. மிக நீண்ட இந்த போரில் சரியான யுத்திகளை கையாண்டு வந்தால், நிச்சயம் வெற்றிபெற முடியும்.

Image Source: playstore-com

Thanks For Reading!

Next: டிராகன் மீது அமர்ந்து பறக்க ஆசையா? அப்போ இந்த Game விளையாடுங்க!

[ad_2]