May 17, 2024
By: mukesh Mபிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான சில தொற்றுகளில் வெள்ளைப்படுதலும் ஒன்று. பெண்களின் பிறப்புறுப்பு வழியே மஞ்சள் - வெள்ளை நிறத்தில் திடமான திரவம் வெளியேறும் இந்த வெள்ளைப்படுதலின் காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் ஏதோ ஒரு பாதிப்பு உள்ளது என்பதை உணர்த்துகிறது. ஒரு சில நேரங்களில் வெள்ளைப்படுதல் இயற்கையானதாக இருக்கலாம். அதேநேரம் இது பாதிப்பையும் ஏற்படுத்தாலம். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
Image Source: istock
பிறப்புறுப்பு கிருமி தொற்று, பாதுகாப்பற்ற உடலுறவு, அடிக்கடி கருக்கலைப்பு போன்றவை இந்த இயல்புக்கு மாறான வெள்ளைப்படுதலின் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
நோய் தொற்று எதுவும் இன்றி கூட பெண்களுக்கு இயல்பாகவே வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். பொதுவாக இயல்பான வெள்ளைப்படுதல் பருவமடையும் காலத்திற்கு முன்பு அல்லது மாதவிடாய்க்கு முந்தைய, பிந்தைய காலகட்டத்தில் நிகழ்கிறது.
Image Source: istock
சுகாதாரமின்மை பால்வினை தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணம். பாதுகாப்பாற்ற உறவு மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரம் போன்றவற்றை கடைபிடிக்காமல் இருப்பது இந்த தொற்றுகள் ஏற்படுவதற்கான வாயுப்புக்களை அதிகப்படுத்துகிறது.
Image Source: istock
பிறப்புறுப்பில் வீக்கம், புண் அல்லது கொப்பளங்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடவும். இவை பால்வினை தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகள்.
Image Source: istock
இயற்கையாகவே பிறப்புறுப்பு பகுதிகளில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளான ஈஸ்ட் மூலம் இத்தொற்று ஏற்படுகிறது. இதனை சரி செய்யாவிட்டால் மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை வாய் பகுதிகளில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
Image Source: istock
உங்களுக்கு பால்வினை தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வெள்ளைப்படுதலில் இருந்து வெளிப்படும் திரவத்தை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும்.
Image Source: istock
பிறப்புறுப்பில் சிவத்தல் புண், கொப்பளங்கள், உடலுவின் போது வலி, சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் போன்றவை வெள்ளைப்படுதல் பாதிப்பின் போது ஏற்படும் சில பொதுவான அறிகுறிகள் ஆகும். இயல்புக்கு மாறான அறிகுறிகள் இருப்பின் மருத்துவர் உதவி நாடுவது நல்லது!
Image Source: pexels-com
Thanks For Reading!