[ad_1] மட்டனில் இப்படி ஊறுகாய் செஞ்சா டேஸ்ட் சும்மா அள்ளும்!

May 2, 2024

BY: Anoj

மட்டனில் இப்படி ஊறுகாய் செஞ்சா டேஸ்ட் சும்மா அள்ளும்!

மட்டன் ஊறுகாய்

எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டு பழக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பரான சுவையில் மட்டன் ஊறுகாயை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/khassabyshahnoor

தேவையான பொருட்கள்

எலும்பு இல்லாத மட்டன் கறி - 300 கிராம்; இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; மஞ்சள் - கால் டீஸ்பூன்; சீரகம் - அரை டீஸ்பூன்; வெந்தயம் - கால் டீஸ்பூன்; கடுகு - 1 டீஸ்பூன்; வர மிளகாய் - 1

Image Source: istock

தேவையான பொருட்கள்

கிராம்பு - 2; கறிவேப்பிலை - சிறிதளவு; எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்; சோம்பு - கால் டீஸ்பூன்; பட்டை - 2; ஏலக்காய் - 2; வர மிளகாய் - 1; நல்லெண்ணெய் - தேவையான அளவு; மிளகாய் தூள் - 1 டீஸபூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் குக்கரில் மட்டன் கறியை எடுத்துகொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்

Image Source: istock

செய்முறை படி - 2

குக்கரில் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் குறைவான நெருப்பில் வேகவிட வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றும் வரை அடுப்பில் வைக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 3

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் வெந்தயம், சீரகம், சோம்பு, கடுகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் 1 வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்

Image Source: pexels-com

செய்முறை படி - 4

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேகவைத்த மட்டன் கறியை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

இப்போது, கறிவேப்பிலை, அரைத்த மசாலா பொடி மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து குறைவான வெப்பத்தில் நன்றாக மிக்ஸ் செய்தால் மட்டன் ஊறுகாய் ரெடி

Image Source: istock

ஊறுகாய் ரெடி

இந்த ஊறுகாயை வெளியே வைக்கும் பட்சத்தில், எண்ணெய் அல்லது வினிகரை சேர்க்க வேண்டும். ஒருவேளை, பிரிட்ஜில் வைக்கும் பட்சத்தில் பவலை அப்படியே வைத்துவிடலாம். நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்

Image Source: instagram-com/homemade__harmonies

Thanks For Reading!

Next: ஊட்டச்சத்து நிறைந்த 'பேரிச்சம் பழ சட்னி' செய்முறை

[ad_2]