Aug 20, 2024
By: Nivethaமண் பாண்டங்களில் சமைத்து சாப்பிடுவதை தான் நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள். அப்படி இதில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய காலக்கட்டத்தில் மீண்டும் நமது மக்கள் மண் பானைகளை தேடி செல்ல துவங்கியுள்ளனர்.
Image Source: istock
மண் பாண்டங்களை கையாளுவது என்பது சற்று கூடுதல் பணி தான். பலரும் கோடைக்காலத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்க மண் பானைகளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் பட்சத்தில் உடனடியாக அதனை பயன்படுத்த கூடாது. எப்படி பயன்படுத்த வேண்டுமே என்பதை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
Image Source: pixabay-com
முதலில் நீங்கள் மண் பானைகளை வாங்கினால் அதனை வெளிப்புறம் மட்டும் நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். பானையின் உள்புறம் கழுவ கூடாது. பிறகு அதில் தண்ணீர் ஊற்றி ஒருநாள் முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.
Image Source: pexels-com
மறுநாள் அந்த பானையில் இருக்கும் நீரை கீழே ஊற்றிவிட்டு பானையை வெயிலில் வைத்து நன்கு உலர வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இந்த நீரினை ஒருசில மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி கொண்டே இருக்க வேண்டும்.
Image Source: istock
பின்னர் அதில் அரிசி கழுவிய நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற விடவும், பின்னர் அதனை கீழே ஊற்றிவிட்டு கல் உப்பு சேர்த்த நீரினை பானையில் ஊற்றி ஊறவிடுங்கள். அரைநாள் ஊறிய பின்னர் அந்த நீரினை மாற்ற வேண்டும். இப்படியே 3 நாட்கள் கல் உப்பு நீர், அரிசி கழுவிய நீர், சாதாரண நீர் என மாற்றி மாற்றி ஊற்றி ஊறவிட்டு வைக்க வேண்டும்.
Image Source: istock
3 நாட்களுக்கு பிறகு பானை நன்கு காய்ந்த பிறகு அதில் குடிநீர் ஊற்றி வைக்கலாம். அதேபோல் பானையை தரையில் வைக்காமல் மணலை குமித்து அதன் மீது பானையை வைக்கவும். பானையை சுற்றி ஒரு துணியை தண்ணீரில் நனைத்து கட்டி விடுங்கள். இப்படி செய்வதால் மண் பானை மேலும் தண்ணீருக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
Image Source: istock
மண் பானையை தவறியும் வெயிலில் காய வைக்க கூடாது. ஏனெனில் வெயிலின் வெப்பம் காரணமாக மண் பானையில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் குடிநீர் ஊற்றி வைக்கும் மண் பானைகளை மறவாமல் மூடி வையுங்கள்.
Image Source: istock
ஒரு சுத்தமான வெள்ளை துணியில் 6 மிளகு, 4 தேக்கரண்டி சீரகம், 1 துண்டு நன்னாரி வேர், வெட்டி வேர் சிறிதளவு, 3 தேத்தான் கொட்டை ஆகியவற்றை வைத்து கட்டி முடிச்சி போட்டு 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் மண் பானையில் போடுங்கள். இந்த முடிச்சி பெயர் சத்து நீர் முடிச்சி ஆகும்.
Image Source: pexels-com
சத்து முடிச்சி போட்டு அந்த நீரை குடித்தால் உயிராற்றல் அதிகரிக்கும், இந்த முடிச்சியை ஒவ்வொரு நாளும் வெயிலில் காயவைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். மேலும் மண் பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் முழு சத்தும் நமக்கு கிடைப்பதோடு, உணவு ருசியாகவும் இருக்கும், செரிமானமும் மேம்படும்.
Image Source: istock
Thanks For Reading!