Apr 18, 2022
சிவப்பு ஒயினில் உள்ள மருத்து பண்புகள், ஜலதோசத்தை உண்டாக்கும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இது, மூக்கு அடைப்பு, தும்மல், தொண்டை புண், இருமல் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
Image Source: unsplash-com
மது உயிரை குடிக்கும் என்பார்கள். ஆனால், அளவான மது பழக்கம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மதுவை அளவாக எடுத்துக்கொள்வதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது.
Image Source: unsplash-com
ஓட்கா மற்றும் ஒயின், இவை இரண்டும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் மதுக்கள் ஆகும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதயத்தின் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க உதவுகின்றன.
Image Source: unsplash-com
ஆய்வுகளின் படி மிதமான மது பழக்கம் ஆண்களின் பாலியல் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு மிதமான குடிப்பழக்கம் உதவும், எனினும் இந்த மது அதிகமானால் ஆண்மை குறைவு ஏற்படும்.
Image Source: unsplash-com
திராட்சை கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின்களை அவ்வப்போது எடுத்துக்கொள்வுது உடல் பருமனை குறைக்க உதவும். ஒயினில் உள்ள சேர்மங்கள், கல்லீரலை காப்பதோடு, அளவுக்கு அதிகமான கொழுப்பையும் குறைக்கிறது.
Image Source: pexels-com
அளவாக மதுவை (குறிப்பாக சிவப்பு ஒயின்) எடுத்துக்கொள்வது, உங்கள் நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவும். ஒயின் திராட்சையின் தோலில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
Image Source: unsplash-com
சிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரோல், உயிரணுக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. மேலும் இது உயிரணுக்களின் நீண்ட வாழ்விற்கு வழிவகுத்து, மனிதர்களின் ஆயுட்காலத்திற்கு உதவுகிறது.
Image Source: unsplash-com
மதுவின் ஒரு வகையான பீரில், அதிக அளவு சிலிக்கான் உள்ளது. இது அடர்த்தியான, ஆரோக்கியமான எலும்புக்கு வழி வகுக்கிறது. எனவே, நாள் ஒன்றுக்கு 1-2 கிளாஸ் பியர் குடிப்பது எலும்புகளுக்கு நல்லது.
Image Source: unsplash-com
அளவாக மது குடிப்பவர்களுக்கு நீரிழிவு (சர்க்கரை) நோய் வருதற்கான வாய்ப்பு 40% வரை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பீர் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோயின் அபாயம் குறைகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!
Find out More