Jul 1, 2024
மதுவில் கலக்கப்படும் எத்தனால் எனப்படும் கெமிக்கல்; மதுவை அருந்திய சில நேரத்தில் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு மூளை என அனைத்து உறுப்புகளையும் பாதிக்க தொடங்குகிறது. இதுமட்டும் அல்லாது மேலும் பல குறுகிய கால விளைவுகளையும் உண்டாக்குகிறது.
Image Source: istock
நீங்கள் அருந்தும் ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து மூளையை அடையும் போது மூளைக்கும் செல்களுக்கும் இடையேயான தொடர்பை குறைக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைவது போல தோன்றினாலும், தளர்வு மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Image Source: istock
மது அருந்துபவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற உணர்வினை பெறுகிறார்கள். இதற்கு காரணம் இரத்தத்தில் ஆல்கஹால் கலந்து மூளையை சென்றடையும் போது மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நரம்பியல் கடத்திகளை வெளிவிடுகிறது.
Image Source: istock
ஆல்கஹால் அருந்திய பிறகு மகிழ்ச்சியாக தோன்றினாலும் நேரம் ஆக ஆக மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் எரிச்சல், சோகம், பதட்டம் போன்ற பல உணர்வுகளை குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் உங்களால் கவனிக்க முடியும்.
Image Source: pexels-com
அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்தும் போது மூளையால் நமது தசைகளுக்கு செய்திகளை வேகமாக அனுப்ப முடிவதில்லை. இதனால் நாம் பேசும் போது தடுமாறுதல், மெதுவாக பேசுதல் போன்ற அறிகுறிகளை நம்மால் உணர முடியும்.
Image Source: istock
அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்துவதால் இரைப்பையில் அமிலங்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உங்களுக்கு வாந்தி அல்லது குமட்டல் போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
அளவுக்கு அதிகமான ஆல்கஹால் செரிமான செயல்பாட்டை பாதித்து குடல் பாதையில் எரிச்சல் அல்லது வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் உஷ்ணமாவதால் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Image Source: istock
மது அருந்திய பிறகு ஒரு சிலருக்கு அதிக தலைவலி இருக்கலாம். இதற்கு காரணம் மூளையில் அளவுக்கு அதிகமான இரத்த ஓட்டம், சிறுநீர் சுரப்பு அதிகரிப்பு, உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படுதல் போன்றவை தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
Image Source: istock
மது அருந்திய பிறகு ஆல்கஹால் பல வழிகளில் நமது மூளையின் செயல்பாட்டை பாதித்து மனசோர்வை ஏற்படுத்துகிறது. இதனால் வேலைகளில் ஈடுபடும்போது ஒருநிலைப்படுத்தி வேலை செய்ய இயலாமல் கவனம் சிதறுகிறது. மேலும் இது ஞாபக சக்தியையும் இழக்க செய்கிறது.
Image Source: istock
Thanks For Reading!