Jun 14, 2024
தேனீக்கள் இயற்கையின் மிக முக்கியமான பூச்சிகள் ஆகும். நாம் உண்ணும் பழங்கள் மற்றும் காய்களின் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கும் தேனீக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.
Image Source: unsplash-com
தேனீக்கள் தனது ரக்கைகளை ஒரு நிமிடத்திற்கு 11,400 முறை அடிக்கின்றன. இந்த விரைவான ரக்கை அசைவே தேனீக்கள் எழுப்பும் ரீங்கார இசைக்குக் காரணம்.
Image Source: pexels-com
கூட்டில் எத்தனை பெண் தேனீக்கள் இருந்தாலும் ராணித் தேனீ மட்டுமே முட்டையிடும் திறன் கொண்டது. நாளொன்றுக்கு 2,000 முட்டைகள் வீதம் ஒரு ராணித் தேனீ தன் வாழ்நாளில் சுமார் 80,000 முட்டைகளை இடும்.
Image Source: pexels-com
தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தேனீயால் ஒரு டீஸ்பூன் அளவு தேனை மட்டுமே சேகரிக்க முடியும். வேலைக்கார தேனீ சராசரியாக 5 முதல் 6 வாரங்கள் வரை மட்டுமே உயிர் வாழும்.
Image Source: istock
மனிதர்களின் கண்கள் மற்றும் மூக்கின் வடிவங்களைப் பயன்படுத்தி தேனீக்களால் மனித முகங்களை அடையாளம் காண முடியும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
Image Source: pexels-com
மனிதர்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் ஒரே பூச்சி தேனீக்கள். தேனுடன் ஹனி வாக்ஸ், ராய்ல் ஜெல்லி மற்றும் மருத்துவத்திற்குப் பயன்படும் புரோபோலிஸ் ஆகியவற்றையும் இவை உற்பத்தி செய்கின்றன.
Image Source: pexels-com
ஒரு வேலைக்கார தேனீயின் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே என்றாலும், ராணித் தேனீக்கள் ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.
Image Source: unsplash-com
மற்ற தேனீக்களுடன் தொடர்புகொள்ளவும், நல்ல தேன் இருக்குமிடம், அதன் தூரம், திசை ஆகிய விவரங்களை பரிமாறவும் தேனீக்கள் 'வாகில் நடனம்' என்கிற உடலசைவைச் செய்கின்றன.
Image Source: pexels-com
தேனீக்கள் தங்களது தேன் கூடுகளைக் கடுமையாகப் பாதுகாக்கும். பலவீனமான தேன் கூட்டைக் கண்டால் பிற தேனீக்கள் அதனுள் இருக்கும் தேனைத் திருட முயலும்.
Image Source: istock
Thanks For Reading!