May 2, 2024
மனிதர்களை தாக்கும் பிரதான ஊட்டச்சத்து குறைபாடுகள் என்ன? இதன் அறிகுறிகள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
உப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களின் மீது ஆசை இருப்பது, உப்பை அதிகம் உட்கொள்ள விரும்புவது போன்ற விசித்திர ஆர்வம் ஆனது உடலில் பொட்டாசியம் (அ) சோடியம் குறைவாக இருப்பதன் அறிகுறியாகும்!
Image Source: istock
ஐஸ் கிரீம், ஐஸ்கட்டிகள் போன்ற குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: pexels-com
உடலில் காப்பர், போலட் போன்ற ஊட்டங்களின் அளவு குறைவாக உள்ளபோது இந்த மங்களான பார்வை பிரச்சனை ஏற்பட கூடும். இந்த பிரச்சனையை சமாளிக்க காப்பர் நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
அழுகிய பழத்தில் வாசம் போன்று உடலில் துர்நாற்றம் வீசுவது உடலில் ஜிங்க், குரோமியம் அளவு குறைவாக உள்ளதை குறிக்கிறது. இந்த பிரச்சனயை சமாளிக்க முருங்கைக்காய், கொண்டைக்கடலை, தயிர் உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
வைட்டமின் பி2 தட்டுப்பாடு உண்டாகும் போது உதட்டில் வெடிப்பு, விரிசல்கள் ஏற்பட கூடும். இந்த பிரச்சனையை சமாளிக்க காளான், பாதாம் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் கூச்ச உணர்வு இருப்பது உடலில் வைட்டமின் பி12 அளவு குறைவாக இருப்பதை குறிக்கிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க முட்டை, பால், பன்னீர், மீன் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
அளவுக்கு மிகுதியாக பொடுகு உதிர்வது வைட்டமின் பி6, ஜிங்க், கொழுப்பு அமிலம் தட்டுப்பாட்டின் அறிகுறியாகும். இந்த பிரச்சனையை சமாளிக்க பூசணி விதை, தயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
சருமத்தில் ஆங்காங்கே வெண்புள்ளிகள் தென்படுவது ஒமேகா-3 கொழுப்பின் தட்டுப்பாட்டை குறிக்கிறது. இப்பிரச்சனையை சமாளிக்க ஆளி விதை, சாலமன் மீனு, வால்நட்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
Thanks For Reading!