Jul 27, 2024
மனிதர்களைப் போல் பிற உயிரினங்களின் மூளையும் சிக்கலான செயல்பாடுகளை செய்யுமா என்கிற கேள்வி நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதிலாக உலகின் புத்திசாலி உயிரினங்களின் வரிசை இதோ.
Image Source: pexels-com
இந்த வரிசையில் முதலில் இருப்பது, மனிதர்களே. சிக்கல்களுக்குத் தீர்வு காணும் அறிவாற்றல், மொழி மற்றும் கலாச்சார குறித்த புரிதல் மனிதர்களை உலகின் மிகவும் புத்திசாலி இனமாக உயர்த்துகிறது.
Image Source: pexels-com
சிம்பன்சிகளின் மூளை மனித மூளையுடன் 98% மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளது. கருவிகளைப் பயன்படுத்துதல், குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்ற செயல்திறனைப் பெற்றுள்ளது.
Image Source: pexels-com
டால்பின்கள் அதிக புத்திக்கூர்மையும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் திறனும் கொண்ட உயிரினங்கள். அவை ஒன்றையொன்று தொடர்பு கொள்ள சிக்கலான ஒலி சமிக்கைகளை பயன்படுத்துகின்றன.
Image Source: pexels-com
ஒராங்குடான்கள் கருவிகளைப் பயன்படுத்துவதில் திறமை பெற்றவை. இலைகளை மடக்கி தண்ணீரைக் குடிக்க மற்றும் காய்களைத் திறக்க அவை கருவிகளை பயன்படுத்துகின்றன.
Image Source: pexels-com
யானைகள் குறிப்பிடத்தக்க நினைவாற்றல், சமூக நுண்ணறிவு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கொண்டுள்ளன. இவை இரக்கம், துக்கம் உள்ளிட்ட உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன.
Image Source: pexels-com
காக்கைகளின் பகுத்தறிவு திறனை 7 வயதுக் குழந்தையுடன் ஒப்பிடுகின்றன ஆய்வுகள். இவை சிறந்த நினைவாற்றலையும் மற்றும் மனிதர்களை அடையாளம் காணும் திறனையும் கொண்டுள்ளன.
Image Source: pexels-com
மிகவும் புத்திசாலியான கடல் வாழ் உயிரினமான இது சிக்கலான 'மேஸ்' உள்ளிட்ட புதிர்களைக் கடக்கும் திறன் கொண்டது. குறுகிய நினைவாற்றலும் இதற்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Image Source: pexels-com
தேனீக்களின் சிக்கலான சமூக கட்டமைப்பு மற்றும் கருத்துக்கள் அல்லது தகவல்களை நடனம் மூலம் பரிமாறிக் கொள்ளும் ஆற்றல் போன்றவை அவற்றின் புத்திக்கூர்மையைக் காட்டுகின்றன.
Image Source: pexels-com
Thanks For Reading!