[ad_1] மனிதர்கள் மற்றும் நாய்களுக்கு இடையேயுள்ள பாச பிணைப்பின் காரணம் என்ன தெரியுமா ?

Jul 9, 2024

மனிதர்கள் மற்றும் நாய்களுக்கு இடையேயுள்ள பாச பிணைப்பின் காரணம் என்ன தெரியுமா ?

Nivetha

செல்லப்பிராணி

பல காலங்களாகவே மனிதர்களோடு அதிக நெருக்கம் கொண்ட பிராணி என்றால் அது நாய் தான். பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் நாய்களை தங்கள் செல்ல பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். அப்படி இருவருக்கும் இடையேயுள்ள பாச பிணைப்பிற்கு என்ன காரணம் என்பதை இப்பதிவில் காண்போம்.

Image Source: pixabay

கூட்டு வாழ்க்கை

மனிதர்களும் நாய்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்து கூட்டு வாழ்க்கை முறையினை கடைபிடித்து வருகிறார்களாம். ஆரம்ப காலங்களில் மனிதர்களுக்கு விலங்குகளை வேட்டையாட நாய்கள் உதவி செய்துள்ளது.

Image Source: pixabay

பாதுகாப்பு

மேலும் மனிதர்களுக்கு நாய்கள் பாதுகாப்பு வழங்குவதிலும் சிறந்து விளங்கியுள்ளது. அதன் காரணமாகவே மனிதர்கள் நாய்களை தங்கள் வீடுகளில் இருக்க இடம் மற்றும் உணவுகள் கொடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

Image Source: pixabay

புரிதல்

மற்ற விலங்குகளை விட நாய்களின் செய்கைகள், சிணுங்கல்களை மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதே போல், மனிதர்களின் உடல் மொழி, முகப்பாவனைகள் உள்ளிட்டவைகளை அறிந்து ரெஸ்பான்ஸ் செய்வதில் நாய்கள் கில்லாடி. இந்த புரிதல் தான் இருவருக்கும் இடையேயான பிணைப்பிற்கு மிகப்பெரிய காரணம்.

Image Source: pixabay

உணர்ச்சி பிணைப்பு

மனிதர்களின் உணர்ச்சி திறனை நாய்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். தனது உரிமையாளர் சோகமாகவோ, மன அழுத்தத்தில் இருந்தாலோ அது அவருக்கு ஆறுதல் மற்றும் ஆதரவளித்து மன அழுத்தத்தை போக்கும். இந்த உணர்திறன் இருவருக்கிடையே உணர்ச்சி பிணைப்பினை வலுப்படுத்துகிறது.

Image Source: pixabay

விசுவாசம்

நாய்களை போல விசுவாசம் உள்ள விலங்குகள் ஏதுமில்லை. தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் கடுமையாக போராடி அவரை பாதுகாக்கும். பல ஆண்டுகள் கடந்தாலும் நாய்கள் தங்களது பழைய எஜமானர்களையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும்.

Image Source: pixabay

ஆழமான உறவு

நாய்கள் மனிதர்களின் தினசரி வாழ்வில் ஒன்றிணைய கூடியது என்றே கூறலாம். நடைப்பயிற்சி செல்வது, பந்துக்கள் வைத்து விளையாடுவது, செய்தித்தாள் கொண்டு வந்து கொடுப்பது, குழந்தைகள் மற்றும் பெரியோர்களோடு விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இருவருக்கும் இடையே ஆழமான உறவு மற்றும் நினைவுகள் ஏற்படுகிறது

Image Source: pixabay

நன்றி

தனது எஜமானர்கள் தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், தங்குமிடம், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்வதால் நாய்களுக்கு மனிதர்களிடம் நன்றி உணர்வுடன் என்றும் இருக்கும்.

Image Source: pixabay

பேரன்பு

நாய்கள் தங்களை வளர்க்கும் மனிதர்கள் மீது அதிகளவு அன்பு கொண்டவை, நிபந்தனையற்ற அன்பினை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்குபவை ஆகும்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: உலக நாடுகளில் கொண்டாடும் விசித்திரமான 'உணவு திருவிழா'

[ad_2]