[ad_1] 'மன அழுத்தத்தை' உண்டாக்கும் கடினமான வேலைகள் என்ன தெரியுமா?

Jul 2, 2024

'மன அழுத்தத்தை' உண்டாக்கும் கடினமான வேலைகள் என்ன தெரியுமா?

Anoj

கடினமான வேலைகள்

உலகளவில் பல்வேறு துறை சார்ந்த வேலைகள் என்பது கணிக்க முடியாத அளவில் உள்ளது. எல்லாம் தொழிலிலும் கடினமான சூழல் அல்லது காலக்கட்டம் என்பது உண்டாகும். ஆனால் நம்முடைய ஆர்வம் அத்தகைய கடினங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பான்மையை அளிக்கும். அப்படி உலகளவில் கடினமான தொழில்கள் பற்றி காணலாம்.

Image Source: pexels-com

சமூக ஆர்வலர்கள்

சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நினைக்கும் நபர்கள் சமூக, அரசியல் , பொருளாதாரம் அல்லது சுற்றுச்சூழல் சீர்திருத்தங்களில் தலையிடுவதால் பல்வேறு விதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

Image Source: pexels-com

தீயணைப்பு வீரர்

ஒவ்வொரு முறை பணிக்கு செல்லும்போது உயிரை பணயம் வைத்து ஆபத்தில் இருப்பவர்களை காக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். அதீத வெப்பம்,காயம் போன்ற உடலை பாதிக்கக்கூடிய காரணிகளுக்கு மத்தியில் போராடுகிறார்கள்.

Image Source: pexels-com

விமானிகள்

வான்வெளி போக்குவரத்தை திறமையாக கையாளும் இவர்கள், திடீரென ஏற்படும் இயற்கை பேரிடர், தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றையும் திறமையாக கையாளக்கூடியவர்களாக இருப்பார்கள். இதுவும் உயிரை பணயம் வைக்கும் பணிதான்.

Image Source: pexels-com

ராணுவ வீரர்கள்

நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், தங்களுடைய வாழ்க்கையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிரிகள் அச்சுறுத்தல், பருவநிலை சவால்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்த தனிமை போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் பணியாற்றுகிறார்கள்.

Image Source: pexels-com

காவல்துறையினர்

சமூகத்தில் நிலவும் வன்முறை சம்பவங்கள், விரும்பத்தகாத மாற்றங்கள், குற்றங்களை தடுக்கும் பொருட்டு நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் காவல்துறை பணி மிகவும் சவால் நிறைந்ததாகும்.

Image Source: pexels-com

ஊடகவியலாளர்கள்

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள்,பிரச்சினைகள், தொலைநோக்கு விஷயங்களில் சற்று உயிரை பணயம் வைத்து மக்களுக்கான தகவல்களை ஊடகவியலாளர்கள் தருகிறார்கள். இது காலப்போக்கில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வேலையாகும்

Image Source: pexels-com

மனநல ஆலோசகர்

தனிநபர்கள், தம்பதிகள், குடும்பத்தினர் என ஒவ்வொருவரின் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு, வழிமுறைகளை சொல்லும் மனநல ஆலோசகர்கள் பணி கடினமானது. இதற்காக பல்வேறு பயிற்சிகளை பெறுகிறார்கள்.

Image Source: pexels-com

ஆசிரியர்

வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களின் தனிப்பட்ட முறையில் கண்காணித்து அவர்கள் வளர்ச்சிக்கு பங்காற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. தொடர்ச்சியான கற்றல் காரணமாக, மன அழுத்தம் நிறைந்த வேலையாக கருதப்படுகிறது

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: 'ஆன்லைன் கல்வி'யில் உள்ள மிகப்பெரிய சவால்கள் என்ன தெரியுமா?

[ad_2]