[ad_1] மன அழுத்தம் குடலை பாதிக்குமா? இந்த மறைமுக அறிகுறிகளை செக் பண்ணுங்க!

Jul 19, 2024

மன அழுத்தம் குடலை பாதிக்குமா? இந்த மறைமுக அறிகுறிகளை செக் பண்ணுங்க!

Anoj

மன அழுத்தம் சிக்கல்கள்

மன அழுத்தம் மற்றும் குடல் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதிக மனக்கவலை செரிமான மண்டலத்தை பாதிக்க செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்ததால் குடலில் ஏற்படும் அறிகுறிகளை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

பசியின்மை மாற்றங்கள்

மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோன், பசியின்மை அதிகரிக்க அல்லது குறைவதற்கு வழிவகுக்கலாம். அதாவது, சாப்பிடும் ஆர்வம் முற்றிலுமாக நீங்கும் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட செய்வீர்கள்

Image Source: istock

செரிமான பிரச்சனைகள்

மன அழுத்தத்தால் குடல் இயக்கம் மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட செய்யலாம். எவ்வித காரணமும் இன்றி இந்த பிரச்சனைகள் தென்பட்டால், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்

Image Source: istock

குமட்டல் - நெஞ்செரிச்சல்

நாள்பட்ட மன அழுத்தம் குமட்டல் அல்லது வாந்திக்கு வழிவகுக்கலாம். அதேபோல், வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும்

Image Source: istock

வாயு அதிகரிக்கலாம்

மன அழுத்தம் குடலில் நல்ல பாக்டீரியா அளவை சீர்குலைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதனால், உடலில் வாயு அதிகரிப்பது மட்டுமின்றி வயிறு உப்புசமும் உண்டாக்கக்கூடும்

Image Source: istock

எடை மாற்றங்கள்

நாள்பட்ட மன அழுத்தம் உடல் எடையிலும் தாக்கத்தை உண்டாக்கலாம். உணவு முறை மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றம் ஆகியவை எடை அதிகரிக்க அல்லது எடை குறைய வழிவகுக்கலாம்

Image Source: istock

ஊட்டச்சத்து உறிஞ்சுதல்

நாள்பட்ட மன அழுத்தம் குடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்க செய்யலாம். இதனால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும்

Image Source: istock

நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்

மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்த செய்யலாம். இதன் காரணமாக, இரைப்பை குடல் தொற்று பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்

Image Source: istock

குடல் செயல்பாட்டில் மாற்றங்கள்

மன அழுத்தம், குடல் இயக்கத்தில் மாற்றத்தை உண்டாக்கக்கூடும். இதனால் அடிக்கடி மலம் கழிக்க நேரிடலாம் அல்லது மலம் கழிக்க முடியாமல் சிரமத்தையும் சந்திக்கலாம்

Image Source: istock

Thanks For Reading!

Next: உயிர் பலி கேட்கும் ‘சண்டிபுரா வைரஸ்’ பற்றி பலரும் அறியா உண்மைகள்!

[ad_2]