May 11, 2024
இத்தகைய மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களை கண்டு பின்வாங்க மாட்டார்கள். அதனை தங்கள் முன்னேற்றத்திற்கான நல்வாய்ப்பாக நினைத்து பயன்படுத்தும்போது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கிறார்கள்.
Image Source: pexels-com
சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றவர்களிடம் இருந்து பாசிட்டிவ் ஆன விஷயங்களையே எதிர்பார்க்கிறார்கள். அறிவுரை தொடங்கி அவர்கள் செய்யும் உதவி வரை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.
Image Source: pexels-com
கற்கும் காலங்களில் சவால்களை எதிர்கொள்ளும்போது கடுமையான மன அழுத்தத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் மனவலிமை கொண்ட மாணவர்கள் அதனை எப்படி சமாளிப்பது என தெரிந்து வைப்பார்கள். நெருக்கமான சூழலில் அமைதியை கடைபிடித்து தங்கள் பாதையில் கவனம் செலுத்துவார்கள்.
Image Source: pexels-com
கல்வி மற்றும் தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும்போது நிகழும் சூழலை கருத்தில் கொண்டு வளைந்து கொடுத்துப்போக நினைப்பார்கள். அது வெற்றிக்கான படிகளில் ஒன்றாகும்.
Image Source: pexels-com
சிக்கலான நிலையில் இலக்குகளை அடைய தெளிவான மற்றும் எளிதான பாதையை தேர்வு செய்வார்கள். இது அவற்றை நோக்கி விடாமுயற்சியுடன் அவர்கள் செயல்பட உதவும்.
Image Source: pexels-com
மனதளவில் வலிமையாக உள்ள மாணவர்கள் எந்த நேரத்திலும் தன்னடக்கம் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். என்னதான் ஒவ்வொரு நிலையிலும் மனநிறைவு அடைந்தாலும் தொடர்ச்சியாக பயணிக்க நினைப்பார்கள்
Image Source: pexels-com
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பிற விஷயங்கள் என தனக்கென எல்லைகளை நிர்ணயித்து செயல்படுவார்கள். இதனால் வீண் டென்ஷன், நேரமிழப்பு, ஆற்றல் இழப்பு போன்ற விஷயங்களை தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
Image Source: pexels-com
இந்த வகையானவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதற்கான வழியை தேடி ஆக்கப்பூர்வமாக தடைகளை கடக்க முயற்சிப்பார்கள்.
Image Source: pexels-com
மனவலிமை கொண்ட மாணவர்கள் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பார்கள். மற்றவர்களை அங்கீகரிக்கும்போது தங்களின் பலம் அதிகரிப்பதாக நினைப்பார்கள். அனைவருடனும் நல்ல, மரியாதை ரீதியாக தொடர்பை வளர்த்து கொள்வார்கள்
Image Source: pexels-com
Thanks For Reading!