[ad_1] மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் எண்ணத்தை இந்திய மாணவர்கள் ஏன் மாற்ற வேண்டும்?

Jun 20, 2024

மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் எண்ணத்தை இந்திய மாணவர்கள் ஏன் மாற்ற வேண்டும்?

Anoj

மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகள்

12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக மருத்துவம், இன்ஜினியரிங் துறைகள் உள்ளது. அந்த எண்ணத்தை ஏன் இந்திய மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

விரும்புவதற்கான காரணங்கள்

மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் பயில்பவர்களை சமூகம் உயர்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது. குடும்பத்தினரும் மருத்துவர், இன்ஜினியர் என சொல்லிக் கொள்ள பெருமைப்படுகின்றனர். அதேபோல், இவை இரண்டு படிப்புக்கும் எதிர்காலத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Image Source: pexels-com

ஏன் மாற்ற வேண்டும்?

இந்த இரண்டு துறைகளை தாண்டி உற்சாகமான மனநிலையுடன் பயணிக்க ஏராளமான படிப்புகள் உள்ளது. உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற டிசைனிங், வணிகம், ஆராய்ச்சி அல்லது சமூக அறிவியல் போன்ற துறைகளை ஆராயுங்கள்.

Image Source: pexels-com

குடும்ப அழுத்தம்

சமூகம் மற்றும் குடும்பத்தினரின் அழுத்ததால் இந்த துறையை சிலர் தேர்வு செய்கிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படியுங்கள். இல்லையென்றால் சிக்கல் தான்.

Image Source: pexels-com

திறன்களை வளர்த்தல்

பட்டத்துக்காக மட்டும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிக்காதீர்கள். அதற்கு பதிலாக துறை சார்ந்த தகவல் தொடர்பு, சிக்கலை போக்கும் திறன் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

Image Source: istock

வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. உங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களுடன் ஒத்துப்போகும் அதிக வளர்ச்சி கொண்ட துறைகளை கண்டறிந்து அதனை பெற முயற்சியுங்கள்

Image Source: pexels-com

பொருளாதார பிரச்சினை

பொருளாதார பிரச்சினை படிப்புகளில் மிக முக்கியமான ஒன்று. என்றாலும் இந்த இரு துறையை தேர்வு செய்பவர்கள் தனிப்பட்ட ஆர்வம், எதிர்கால வாழ்க்கை, வேலை வாய்ப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு பணம் செலவழிக்கலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்.

Image Source: istock

வெளிநாடுகளில் வேலை

இந்த 2 துறைகள் படித்தால் இந்தியாவில் எப்படியாவது வேலை கிடைத்திடும் என்கிற எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். உலகளவில் அதிக தேவை உள்ள துறைகளை கண்டறிந்து வெளிநாடுகளில் வேலை செய்ய கவனம் செலுத்துங்கள்.

Image Source: pexels-com

தொடர்ச்சியான கற்றல்

தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான விஷயங்களில் கவனம் செலுத்தும் துறையை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். அப்போது தான், தொடர்ந்து வளர்ச்சியடையும் இவ்வுலகில் நம்மை தக்கவைத்து கொள்ள முடியும்

Image Source: istock

Thanks For Reading!

Next: அதிக சம்பளம் கிடைக்கும் ஈஸியான கல்லூரி பட்டப்படிப்புகள் என்னென்ன?

[ad_2]