[ad_1] மருத்துவ குணம் நிறைந்த இந்தியாவின் இயற்கை 'வெந்நீர் ஊற்றுகள்'

Jun 14, 2024

மருத்துவ குணம் நிறைந்த இந்தியாவின் இயற்கை 'வெந்நீர் ஊற்றுகள்'

Pavithra

வெந்நீர் ஊற்று

சிறப்புப் புவியியல் அம்சமான இந்த இயற்கை வெந்நீர் ஊற்றுகள் பெரும்பாலும் உறைபனி சூழ்ந்த இடங்களுக்கு நடுவில் இருப்பது அதிசயமே. மருத்துவம் பண்பு கொண்ட இந்தியாவின் சில வெந்நீர் ஊற்றுகளைப் பார்ப்போம்.

Image Source: instagram-com/mountain_musketeers

பனாமிக்

லதாக்கின் பனாமிக் கிரமத்தில் அமைந்துள்ள இது உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஊற்றுகளுள் ஒன்று. இந்த நீரில் கந்தகம் மற்றும் பிற தாதுகள் நிறைந்துள்ளதால் மருத்துவ குணங்கள் கொண்டது.

Image Source: x-com

மணிகரன் சாஹிப்

ஹிமாச்சாலில் உள்ள இது யாத்திரிகர்களால் புனித நீரூற்றாக கருதப்படுகிறது. தோல் நோய்கள் மற்றும் மூட்டு வலிகளைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

Image Source: instagram-com/kullumanaliheavenonearth

தத்தபாணி வெந்நீர் ஊற்று

ஹிமாச்சலத்தின் சட்லஜ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள தத்தபானி இயற்கையான கந்தக நீரூற்றுகளுள் பிரபலமானது. மூட்டு வலிகள், சோர்வு மற்றும் மன அழுத்த நிவாரணியாகப் பார்க்கப்படுகிறது.

Image Source: instagram-com/ajay-kumar19902

யும்தாங்

பூக்களின் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் யும்தாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்று சிக்கிமின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள நீரின் வெப்பநிலை சுமார் 50°C ஆகும்

Image Source: instagram-com/travel_click_share_repeat

பக்ரேஷ்வர் குண்ட்

மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரே இயற்கை வெந்நீர் ஊற்றான இது முக்கியமான புனிதத் தலமாகும். இது தோல் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

Image Source: x-com

சுமதாங்

லடாக்கின் குளிர் நிலப்பரப்பில் உள்ள மற்றொரு வெந்நீர் ஊற்று சுமதாங். சிந்து ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது குறைவாக அறியப்பட்ட ஒன்று என்றாலும் எழில் கொஞ்சும் இயற்கை அழகைக் கொண்டது.

Image Source: instagram-com/_gaurav_137

கீர்கங்கா

ஹிமாச்சலில் உள்ள கீர்கங்கா நீரூற்று அமைதி நிறைந்த பசுமை சூழ்ந்த இடம். நன்றாகப் பராமரிக்கப்பட்டு, கூட்டம் குறைவாக இருப்பதால், மலையேற்றப் பயணிகளால் சொர்கமாகப் பார்க்கப்படுகிறது.

Image Source: instagram-com/dino_kd16

ரேஷி

சிக்கிமில் ரங்கீத் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம் இல்லை என்றாலும் உள்ளூர் வாசிகள் தினசரி பயன்படுத்தும் இடமாகும். மருத்துவ குணங்கள் நிரம்பியது.

Image Source: instagram-com/sunanda177

Thanks For Reading!

Next: பணத்தை மிச்சப்படுத்தக் கூடிய Budget Vacation-க்கான டிப்ஸ்!

[ad_2]